என் மலர்
நீங்கள் தேடியது "postponed"
- கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது
- படம் நாளை மறுநாள் வெளியாக இருந்தது
ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் 'லாக்டவுன்'. கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் நாளை மறுநாள் வெளியாக இருந்தது.
இந்நிலையில் மழை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள், பார்வையாளர்கள், திரையரங்க ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் மழைநேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விரைவில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.
பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.
இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
இந்நிலையில், BRO CODE என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டிவிசன் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க இண்டோ-ஸ்பிரிட் பிவ்ரேஜஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்ததுடன், விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
- முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மமுன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
- நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் நிகழ்ச்சி ஒத்திவைப்பு.
விஜயின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துளளது.
அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூரில் நடைபெற இருந்த விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம்.
மதுரை:
தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு தினமும் சேரும் பல டன் குப்பைகளை நாள்தோறும் வார்டு வாரியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்தும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.
பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி மாதச்சம்பளம் வழங்கிட வேண்டும்.
அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 6-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விளக்க கடிதம் கொடுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து இரவு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து அடைத்து நள்ளிரவில் விடுவித்தனர்.
இன்று 2-வது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மாநகராட்சி வளாகம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.
இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இதுகுறித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
உரிமைகளுக்காக போராடும் தங்களை போராட கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்று கூறினார்.
- முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.
- கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பிற்கான வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- Thug Life படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
- Thug Life வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டது. பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
அதில், கமல் மற்றும் சிம்பு நடனமாடும் காட்சிகள் ஹைலைட். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், மணி ரத்னம் இயக்கத்தில், கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இசை வெளியீட்டு விழா, சென்னையில் மே 16ம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எல்லையில் நிலவி வரும் போர் பதற்ற சூழல் காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.
- முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.
தொடர்ந்து டெல்லியில் 9 வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.), தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- மக்கள் கருத்துகேட்பு கூட் நாள் 18.5.2023ந் தேதி நடைபெறும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடாங்கி பாளையம் கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமம் நிறுவனம் 35.78.28 ஹெக்டர் அளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள்அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 20.4.2023 அன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடத்த உத்தே சிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்தித்தாளில் வெளியிடப்பட்டு இருந்தது.மேற்குறிப்பிட்ட நாளில் தமிழக தலைமை செயலாளரால் சென்னையில் ஒரு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதால் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்ட நாள் 18.5.2023ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது
- சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்தி வைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், சாலையோர வியாபாரி களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். சாலையோர வியாபாரி களின் வாழ்வாதார பாது காப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்.நகராட்சி ஆணையரின் தள்ளு வண்டிகளை அப்பு றப்படுத்தப்படும், பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்பை திரும்ப பெறவேண் டும், சாலையோர வியாபாரி களின் கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என வலி யுறுத்தினார்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டிஎஸ்பி பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த் தையில், தீபாவளி பண்டிகை வரை தள்ளுவண்டி பறி முதல் செய்யப்படாது, தீபா வளி பண்டிகைக்கு பிறகு தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
- பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் சிமெண்டு ஆலை சுரங்கம் அமைக்கும் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
- அரியலூர் கலெக்டர் உத்தரவு
அரியலூர்,
அரியலூர்அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சிமென்ட்ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்புக் கல் எடுக்க வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், கல்லங்குறிச்சி, சீனிவா சபுரம், தாமரை க்குளம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் குறை வான விலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அப்போது நிலம் அளித்த விவசாய குடும்பத்தின் ஒரு வருக்கு வேலை வழங்கப்ப டும் என்று தெரிவித்த அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை என கூறப்ப டுகிறது.இது தொடர்பாக சம்பந் தப்பட்ட கிராமமக்கள் கோர்ட்டில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுரங்கம் அமைப்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.அப்போது ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில், நிலம் கொடுத்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.
இதனை அறிந்த கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், அரசு சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.
- பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதற்கிடையே, நடப்பாண்டின் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.






