என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி"
- மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
- நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் நிகழ்ச்சி ஒத்திவைப்பு.
விஜயின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துளளது.
அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூரில் நடைபெற இருந்த விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம் சொந்தங்களை இழந்த வேதனை, வருத்தத்தில் இருக்கும் இச்சூழலில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இன்று மாலை மூப்பன்பட்டியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.
- வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்தில் குறைகள் கேட்கின்றனர்.
தூத்துக்குடி:
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் இன்றும், வருகிற 23-ந்தேதியும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகின்றனர்.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில்பட்டி மத்திய ஒன்றியம் மூப்பன்பட்டியிலும், 6.30 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் தோனுகால், 7 மணிக்கு சத்திரப்பட்டி, 8 மணிக்கு ஊத்துப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்கின்றனர்.
இதேபோல் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் கே.குப்பனாபுரத்திலும், 5 மணிக்கு தெற்கு வண்டானத்திலும், 6 மணிக்கு வடக்கு வண்டானத்திலும், 7 மணிக்கு கொப்பம்பட்டியிலும் நடைபெறும் மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிகின்றனர்.






