என் மலர்
நீங்கள் தேடியது "ஒத்திவைப்பு"
- நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.
- முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச் 24, 25-ந் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அண்மையில் தெரிவித்தது.
தொடர்ந்து டெல்லியில் 9 வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பை உள்ளடக்கிய அனைத்து வங்கி சங்கங்கள் மன்றம் (யு.எப்.பி.யு.), தலைமை தொழிலாளர் ஆணையர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தங்கள் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பில் சாதகமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக யு.எப்.பி.யு. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் பிற்பகல் 2 மணிவரை சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர்.
அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அவையில் தான் பார்த்த விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் எனக்கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், மக்களவை மீண்டும் கூடியதும் வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவை கூடியதும் முதலில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- புயல் எச்சரிக்கையால் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலூர்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில், பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ந் தேதியன்று, சென்னை, திருச்சி, சேலம், கடலூர், மதுரை ஆகிய இடங்களில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே, நாளை நடக்க இருந்த மறியல் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. அதன்படி வரும் 14-ந் தேதி சென்னை, திருச்சி, சேலம், கடலூர் மதுரை ஆகிய இடங்களில்மறியல் போராட்டம் நடக்கும். இவ்வாறு அறிக்கையில் உள்ளது.
- கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது.
- பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் 15 -ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர். அப்போது சோனங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் பஞ்சநாதன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்3 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
. மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 16- ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது மார்ச் 4 -ந் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற 8 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதல் கடலூர் மாவட்டம் முழுவதும் இந்த வழக்கு தொடர்பாக பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தினால் பரபரப்பு அடங்கி அமைதி யான நிலை தொடர்ந்தது.
- ராஜபாளையம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- இதில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போராட்ட குழுவினரிடம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ராஷியாம். ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும். சொத்து வரி குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.
குடிநீர் இணைப்பு கட்டணம், கூடுதல் வரி அடுத்த ஆண்டில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
- 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவினாசி :
திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.
இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.
17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
- காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- மக்கள் கருத்துகேட்பு கூட் நாள் 18.5.2023ந் தேதி நடைபெறும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடாங்கி பாளையம் கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமம் நிறுவனம் 35.78.28 ஹெக்டர் அளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள்அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 20.4.2023 அன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடத்த உத்தே சிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்தித்தாளில் வெளியிடப்பட்டு இருந்தது.மேற்குறிப்பிட்ட நாளில் தமிழக தலைமை செயலாளரால் சென்னையில் ஒரு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருப்பதால் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்ட நாள் 18.5.2023ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முன் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
- மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற தொழிலதிபரை கடத்தி மிரட்டிய புகார் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன் (வயது 52), தங்கமுனியசாமி(30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ரவிசந்திரன் (53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராஜேந்திரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜ வர்மன், தங்கமுனியசாமி, ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி(பொறுப்பு) பூர்ண ஜெய ஆனந்த் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சேலம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரி யர்கள், இடைநிலை, பட்ட தாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது. இதில் உபரி பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடை பெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலும் வெளி யிடப்பட்டது.இதனிடையே நடப்பாண்டில் போதுமான பாடவேளை இல்லாத முதுகலை ஆசிரியர்களை 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிப்ப துடன், அதன் அடிப்படை யில் பட்டதாரி ஆசிரி யர்களை உபரியாக கணக்கிட்டு பட்டியல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்ட தாரி ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழக மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், தலைவர் பாஸ்கரன், பொரு ளாளர் மலர் கண்ணன் மற்றும் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலா ளருக்கும் கோரிக்கை மனு அனுப்பினர். அதில், முதுகலை ஆசிரியர்களை கீழ் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்க கூடாது, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைபடியே பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியு றுத்தினார்.இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரி வித்துள்ளது.
- 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர்.
- சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கடலூர்:
நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17நாட்களாக பல்வேறு கட்டதொடர் போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை வடலூரில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் ஒப்பந்த தொழி லாளர்கள் பிரச்சனை குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது .இதன் சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு ெரயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக நெய்வேலி அண்ணா திடலில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட போரா ட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அமையும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி தெரிவித்தார்.
- கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடலூர்:
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 20 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டம் அறிவித்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை போராட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.