என் மலர்
நீங்கள் தேடியது "புஸ்ஸி ஆனந்த்"
- மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
- நிர்வாகிகள் விவாதங்களில் பங்கேற்பதோ, நேர்காணல் வழங்குவதோ கூடாது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.
முன்அனுமதி பெறாமல், எந்தவிதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம்
- நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகளிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "உங்கள் மீது யாராவது கை வைத்தால், ஆயிரம் இல்லை ரெண்டாயிரம் தவெக தொண்டர்கள் அடுத்த 15 நிமிடங்களில் உங்களுடன் வந்து நிற்பார்கள். யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
அவர்களிடம் ரூ.5000 கோடி இருக்கலாம், ரூ.10,000 கோடி இருக்கலாம், மந்திரியா இருக்கலாம்... ஆனா நம்மிடம் நம்ம தலைவரின் முகம் இருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். உங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.
- த.வெ.க. தலைவர் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
- அனுமதிச்சீட்டு பெறாதவர்கள் நேரில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டுகோள்.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது.
- நம் வெற்றித் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்.
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுளளார்.
அந்த அறிக்கையில், "கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. கழகத்தை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கான நம் தலைவர் அவர்களின் முன்னெடுப்புகள். மிக முக்கியமானவை. ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தன் மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, நம் தலைவர் அவர்கள் அத்தனைத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாகக் களமாடி வருகிறார். நம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் 'தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, நமது கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், வரும் 2ஆம் தேதி (02.02.2026, திங்கள்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. இதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களுக்காக உழைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று. நம் வெற்றித் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்.
- விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசியதால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், "விஜயால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்ல முடியும். ஆனால், சட்டப்படி 3 அல்லது 4 தொகுதிகளில் மட்டுமே ஒருவர் போட்டியிட முடியும்" என தெரிவித்தார்.
மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தேர்தலில் ஒருவரால் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல், கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் ஆஜர்.
- சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
மேலும், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல், கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர்.
சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார்.
- பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மக்கள் சந்திப்பு, அரசியல் நகர்வுகளில் விஜயும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தீவிரமாக செயலாற்றுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, இடையில் சுற்றுப்பயணத்தில் தொய்வு ஏற்பட்டது. அதனையடுத்து காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அதேபோல் சமீபத்தில் நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்தல் களப் பணிகளை சீரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 234 தொகுதிகளில் 69 ஆயிரம் பூத் கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, அவர்களும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். மேலும் தேர்தல், கட்சி தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் விதமாக முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வப்போது செய்கின்றனர்.
இந்த நிலையில் பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்புச் பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் வந்தனர்.
இதையடுத்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜயின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை குறித்து விவாதிக்கப்படுகிறது.
- இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம்.
- வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் முதல் முறையாக விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் என்பதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் பொதுக்கூட்டம் என்பது மாநாடு போல் காட்சியளித்தது.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு முன்னதாகவே வந்த விஜய், சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக பிரசார வாகனத்தில் இருந்து வெளியே வரவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்த அவலநிலை ஏற்பட்டது.
இதன்பின் 11. 13 மணியளவில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார் என்றார்.
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
- நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்.
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜயை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
இதன் பின்னரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மைதானத்திற்குள் பாஸ் இல்லாதவர்கள் செல்ல அனுமதித்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பெண் காவல் அதிகாரி ஈஷா சிங் கடுமையாக எச்சரித்தார்.
பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பிய புஸ்ஸி ஆனந்தை பார்த்து கடுப்பான பெண் காவல் அதிகாரி, நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
- கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
- தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
- அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன்.
- கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.
பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:
* அரசியலில் அரை நூற்றாண்டு பயணித்த மாமனிதர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி.
* த.வெ.க. எனும் கொள்கை கூட்டத்தில் முக்கியமான மாமனிதர் சேர்ந்திருக்கிறார்.
* கட்சிக்கு மரியாதை, தொண்டர்களின் அரவணைப்பு இதுதான் செங்கோட்டையனின் இலக்கணம்.
இவ்வாறு அவர் கூறினார்.






