என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pussy Anandu"

    • காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை.
    • கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம்.

    கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

    காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார்.

    இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.

    இந்நிலையில், கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர்

    பலியான வழக்கில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஜனநாயகன் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது
    • போராட்டக்காரர் வேடத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

    எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

    மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

    இந்நிலையில், விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போராட்டக்காரர் வேடத்தில் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

    • விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.
    • நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.

    மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடக்க உரையாற்றினார்.

    அப்போது அவர் விஜயின் பெற்றோர் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.

    மேலும் அவர்," சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடத்தினோம். அப்போது நம் எண்ணங்களை, ஆசைகளை தலைவருடன் பகிர்ந்துக் கொண்டோம்.

    நம் தலைவர் ஒரு கட்சியை அல்ல. புரட்சியை தொடங்கினார் என்று கோடிக்கணக்கான மக்கள் படை இவருடன் நிற்கிறது. இதற்கு பேர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது.

    அதேபோல், இன்று நம் வெற்றித் தலைவரின் ஆணையின்படி மதுரை மண்ணில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாட்டில் நிற்கிறோம்.

    இத்தனை லட்சம் மக்களை பார்க்கும்போது ஒரே வார்த்தைதான் தோன்றுகிறது. வெற்றி.. வெற்றி.. வெற்றி.

    எந்தவொரு தலைவருக்கும் வராத அளவில் தலைவர் விஜய்க்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் வரத் தொடங்கியது" என்றார்.

    • கட்சி தொண்டர்களிடம் விஜய் என்ற பெயரையே கூறக்கூடாது புஸ்சி ஆனந்த் பேசியது சர்ச்சையானது.
    • விஜய் என்று கூறாமல் தளபதி என்று தான் கூற வேண்டும் என்று புஸ்சி ஆனந்த் பேசியிருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு JV தளபதி" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோசப் விஜய் என்பதை தான் சுருக்கி JV என்று புஸ்சி ஆனந்த் கூறுகிறார். ஏற்கனவே அவர் கட்சி தொண்டர்களிடம் விஜய் என்ற பெயரையே கூறக்கூடாது தளபதி என்று தான் கூற வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    இப்போது ஜோசப் விஜய் என்பதை சுருக்கி JV என்று பேசியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுப்பாளையம் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு விஜயின் விலையில்லா ரொட்டிபால் வழங்கும் திட்டத்தை அகில இந்திய பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்து தொடங்கிவைத்தார்.
    • இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, விவசாய அணி மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுப்பாளையம் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு விஜயின் விலையில்லா ரொட்டிபால் வழங்கும் திட்டத்தை அகில இந்திய பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்து தொடங்கிவைத்தார்.

    மேலும், பனி மற்றும் குளிர்காலத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள 100 ஆதரவற்றவர்களுக்கு போர்வை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியை கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.

    இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, விவசாய அணி மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுவை ரெயில் நிலையம், நேதாஜி நகர் பகுதி சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்ற பொதுமக்களுக்கும், மற்றும் புதுவை ரெயின்போ டிரஸ்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து சுமார் 200 போர்வைகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில செயலாளர் சரவணன், மாநில நிர்வாகிகள் பொன்முடி, புதியவன், நிரேஷ், மற்றும் தொகுதி தலைவர்கள் இளைஞரணி தலைவர்கள் தொண்டராணி தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
    • அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் நேரில் வந்து ஈவிகேஎஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையாகவும், சமூக வலைதளத்திலும் இரங்கல் செய்தியாகவும் வெளியிட்டுள்ளனர்.

    அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் நேரில் வந்து ஈவிகேஎஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு த.வெ.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    • நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
    • சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

    விழுப்புரம்:

    உலக மகளிர் தின விழா உலகம் முழுவதும் மகளிர் அமைப்பு மற்றும் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழகத்தில் பல்வேறு கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தில் த.வெ.க . கட்சி சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன்ராஜ் ஏற்பாட்டின் படி விழுப்புரம் நகராட்சிகாமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக த.வெ.க. கட்சி மாநில செயலாளரும் முன்னாள்ன எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு 8 மாற்றுத்திறனாளி களுக்கு மிதிவண்டிகள், 10 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து எந்திரம், 500 மகளிர்களுக்கு சேலைகள்,150 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, 250 பேர்களுக்கு டபுள்டிபன் பாக்ஸ்,250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் தொகுப்பு பைகள்,100 பெண்களுக்கு சில்வர் குடம், 50 விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு மண்வெட்டி, சலவை தொழிலாளி 5 பேர்களுக்கு இஸ்திரி பெட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டும் மகளிர்களுக்கு தலைக்கவசம் 50 நபர்களுக்கும், துப்புரவு தொழிலாளர் 25 நபர்களுக்கு கோட்,15 செவிலியர்களுக்கு கோட், 50 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் சாலையோரம் நடை வியாபாரிகள் பேருக்கு 50 குடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.

    பெண்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் நிகழ்த்திக் காட்ட முடியும். அதனால் தான் நம் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாவட்ட செயலாளருடன் 14 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். அதில் 5 மகளிருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது .

    பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். பெண்கள் எவ்வளவு பெரிய தடையையும் தகர்த்து சாதனை செய்யும் போர் குணம் கொண்டவர்கள். தாய்மார்களின் ஆதரவும் அன்பும் நம் தலைவர் தளபதிக்கு அதிகளவில் உள்ளது. உங்களைப் போன்ற தாய்மார்களை நம்பி தான் தலைவர் தளபதி அரசியலுக்கு வந்துள்ளார் தலைவரை வெற்றி பெற வைக்க நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும் .

    சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தளபதி சார்பாகவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாகவும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறார்கள். அவருக்கு தான் பதவிகள் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.

    ஆரம்பத்திலிருந்து யார் யார் தலைவரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தார்களோ அவர்களுக்கு தான் தலைவர் பதவி அளிப்பார். இதில் எந்த அச்சமும் தேவையில்லை. மாற்றுக் கட்சியில் இருந்து ஹெலிகாப்டரிலே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகள் அளிக்க மாட்டார் நமது தலைவர்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×