என் மலர்
நீங்கள் தேடியது "Pooja Hegde"
- விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திந்தார்.
- பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அதிக செலவு செய்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு வைத்து சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே பெற்றோருடன் மும்பையில் வசிக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னை அல்லது ஐதராபாத்துக்கு வரும்போது தன்னுடன் சிகை அலங்கார நிபுணர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட 10 முதல் 12 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

பூஜா ஹெக்டே
பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அநாவசியமான செலவுகளை செய்ய கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம். சமீபத்தில் படத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது அதிக உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பட நிறுவனத்தின் பணத்தில் பூஜா ஹெக்டே செலவு செய்தது தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து உதவியாளர்களுக்கான ஓட்டல், சாப்பாடு உள்ளிட்ட செலவு பில்களை பூஜா ஹெக்டேவுக்கு அனுப்பி அந்த பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்து இருப்பதாகவும், இதனால் அதிர்ச்சியான பூஜா ஹெக்டே பணத்தை கட்டி விட தயாராகி வருவதாகவும் திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
- சமீபத்தில் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கலந்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் கைவசம் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன படம் உள்ளது.

பூஜா ஹெக்டே
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் சட்டையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற சட்டையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
— Pooja Hegde (@hegdepooja) June 19, 2022
- நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
- சமீபத்தில் நடந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பூஜா ஹெக்டே கலந்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது இவர் கைவசம் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன படம் உள்ளது.

பூஜா ஹெக்டே
இந்நிலையில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக யஷ் படத்தில் இவர் இணையவுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.