துல்கர் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

காதல் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
துல்கர் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
Published on

அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கத்தில், துல்கர் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்ரீ ஸ்ரீ’. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, முதல்முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் – பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.

காதல் கதையாக உருவாகி உள்ளப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ பாடல் வெளியாகி உள்ளது.

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், தரன் வரிகளில் உருவாகியுள்ளப் பாடலை நகுல் அபயங்கர் பாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com