பாலிவுட் நடிகருடன் காதல்.. ஒன்றாக டேட்டிங் - சொல்லாமல் சொன்ன பூஜா ஹெக்டே!

சைஃப் அலிகானுடன் இணைந்து நடித்ததன் மூலம், திரையுலகிற்கு ரோஹன் மெஹ்ரா அறிமுகமானார்.
பாலிவுட் நடிகருடன் காதல்.. ஒன்றாக டேட்டிங் - சொல்லாமல் சொன்ன பூஜா ஹெக்டே!
Published on

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ரா என்பவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் ரோஹன் மெஹ்ராவை பூஜா ஹெக்டே அடிக்கடி சந்தித்து பேசி வருவதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பல முக்கிய நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக வலம் வந்தனர். ஆனால் இதுதொடர்பாக வந்த வதந்திகளுக்கு இருவரும் எந்தவிதமான கருத்தோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் மும்பை நட்சத்திர ஹோட்டலில் இருவரும் சந்தித்து கொண்ட நிகழ்வு, சினிமா வட்டாரத்தில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலிவுட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பஜார் திரைப்படத்தில் சைஃப் அலிகானுடன் இணைந்து நடித்ததன் மூலம், திரையுலகிற்கு ரோஹன் மெஹ்ரா அறிமுகமானார்.

இதை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்தில், உதவி இயக்குநராக ரோஹன் மெஹ்ரா பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே வலம் வரும் செய்திகள், நட்பா அல்லது காதலா என்று சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com