என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ் கமிட்டி"
தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா திடீரென அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பாத்திமா ரோஸ்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #Nagma #TamilNaduCongress
புதுடெல்லி:
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலராக, நடிகை நக்மாவை நியமித்ததும், அவருக்கு தமிழகம், புதுச்சேரி என, இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாத்திமா ரோஸ்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நக்மாவிற்கு ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.






