search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Committee Meeting"

    • கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.
    • இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக அறிவிப்பு.

    கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில்," பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு" தெரிவித்திருந்தார்.

    மேலும், "அப்போது, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்த இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக" தெரிவித்த நீதிபதி, சண்முகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 5-ம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களவைத் தேர்தல்களை எதிர் கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின் படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணைப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    அக்டோபர் 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கான நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

    அக்டோபர் 2-ந் தேதி திங்கள்கிழமை அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக வருகிற 3-ந் தேதி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம அளவிலான கட்சிக் கூட்டங்கள் 4-ந் தேதி நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவரவர் கிராமங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அக்டோபர் 5-ம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

    அக்டோபர் 8-ம் நாள் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கூட்டங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான செயல்திட்டங்கள், குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
    • அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்று இப்போதே முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    அந்த வைகயில் டி.டி.வி.தினகரன் தலைமை யிலான அ.ம.மு.க. தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்குள் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

    தேவர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு இவர்களது வியூகம் அமையும் என தெரிகிறது.

    இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி கூடுகிறது.

    இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
    • ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி, கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொகுதி தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் சேருவதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு வழங்கினார். அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கீழக்கரை, திருப்புல்லாணி,பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியன், மாவட்ட சிறுதொழில் முகமை உதவி கமிஷனர் சுரேஷ் பாபுஜி, மாநில தலைவர் திருமுருகன், துணைத் தலைவர் பால்கனி, செயலாளர் விஜிஸ், இணை செயலாளர்கள் மணிகண்டன், மாரிமுத்து, பொருளாளர் விஜயன், செயற்குழு உறுப்பினர்கள் காஞ்சனா, ஊர்மிளா, செல்வம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், உணவு பொருள் வியாபாரி சங்க கவுரவ தலைவர் ஜெயபிரகாசம், மடீட்சியா தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்பள தொழிலுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், அபராதம் தொகையை ரத்து செய்ய வேண்டும், அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீதான உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது
    • அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூரில் நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவர் தனியரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அடுத்த ஆண்டு அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும். தி.மு.க. அரசு பதவியேற்று 15 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி, சட்டம் ஒழுங்கையும் சிறப்புடன் பாதுகாத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது,

    மத்திய அரசின் புதிய வணிக கொள்கை சில்லறை வியாபாரத்தை ஒழித்து கார்ப்பரேட் பெருவணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் முறையை கைவிட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு சலுகையும், ஊக்கமும் தந்து அவர்களை பாதுகாத்திட மத்திய அரசை கேட்டுக்கொள்வது, நாட்டில் பெருகிவரும் மது, கஞ்சா போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழித்து ஒழுக்கமும், ஆரோக்கியமும் நிலை பெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அருள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்."

    • திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

    திருச்சி:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கழக அமைப்பு தேர்தல்-2022 திருச்சி மேற்கு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான அ.பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.

    த.மு.மு.க. மாநில செயலாளரும் தலைமை தேர்தல் அதிகாரியான நெல்லை மைதீன் சேட்கான் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

    3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளுக்கு புதிய நிர்வாகிகளும், பொன்னம்பட்டி பேரூர் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகளும் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யபட்டு அறிவிக்கப்பட்டனர்.

    இப்ராஹிம், இம்ரான், மணவை அக்பர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பேரூர் கழகம், வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.
    • தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்

    மங்கலம் :

    கோவை ,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் சாமளாபுரம் அருகே உள்ள கோம்பக்காட்டு புதூர் -தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தலைவர் சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஈஸ்வரன், சங்க பொருளாளர் பூபதி மற்றும் கிளை நிர்வாகிகள் ,விசைத்தறி உரிமையாளர்கள் உள்பட பலர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சோமனூர் விசைத்தறி சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அரசு அறிவித்துள்ள 30 சதவீதம் மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஒரு யூனிட்டிற்கு ரூ.1.40 பைசா உயர்வு என்பது ஒவ்வொரு விசைத்தறி யாளருக்கும், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. எனவே கூலிக்கு நெசவு செய்யும் எங்களால் எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத சூழ்நிலையில் உயர்த்திய மின் கட்டண உயர்வை அரசு சாதா விசைத்தறிகளுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் .

    வருகிற 16-8-2022ந்தேதி காலை 10 மணியளவில் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் குடும்பத்தோடு கட்டாயம் கலந்து கொண்டு தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், அரசும் மின்வாரியமும் ,தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் சாதா விசைத்தறி டேரிப்-க்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மின் கட்டண உயர்வை வேறு எந்த வகையிலும் செலுத்த இயலாது. ஆகவே விசைத்தறிகளை நிறுத்தி போராடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே தமிழக அரசு முன்வந்து சாதா விசைத்தறி டேரிப்க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு இலவச வேட்டி,சேலை,சீருடை ரகங்களை விசைத்தறிகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் எனவும், மேலும் சாதா விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவருக்கும் அனைத்து விசைத்தறி யாளர்களும் பதிவு அஞ்சல் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு 35-வது பொதுக்குழு கூட்டம் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் டாக்டர்.அருணாசலம் தலைமை தாங்கினார். உழவர் விவாதக்குழு அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றுப்பேசினார். முன்னாள் செயலாளர் ஆசிரியர் விஸ்வநாதன், துணைச்செயலளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுந்தப்பாடி நுகர்வோர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்லமுத்து வரவு-செலவு கணக்கு வாசித்தார். மாநில அளவில் கரும்பு விளைச்சலில் சாதனைபடைத்த அரியப்பம்பாளையம் விவசாயி குமார், வேம்பத்தி விவசாயி ஈஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    பெங்களூரில் இந்திய அளவில் நடைபெற்ற தட்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலயாவில் நடைபெறும் சர்வதேசஅளவிலான தட்டெறிதல் போட்டிக்கு தேர்வு பெற்ற தலைமை காவலர் சரவணக்குமார், சென்னை நேருவிளையாட்டு அரங்கில் இந்திய அளவில் நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 2-ம் பிடித்த சண்முகம் ஆகியோருக்கு பரிசுவழங்கி பாராட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சித்தா டாக்டர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், சலங்கபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் ராமலிங்கம், தலைைமயாசிரியர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×