என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்மா"

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா.
    • ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

    நக்மா

    நக்மா

     

     சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது. ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். தொடர்ந்து நடிகைகள் ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்ரா மற்றும் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெற்றார்.

    நக்மா

    நக்மா

     

    இந்நிலையில் நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அரசு சேவை வழங்கும் ஈ.சி.எச். டிஜிட்டல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நக்மாவுக்கு கோல்டன் விசாவை அதிகாரிகள் வழங்கினர்.

    தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா திடீரென அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பாத்திமா ரோஸ்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். #Nagma #TamilNaduCongress
    புதுடெல்லி:

    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலராக, நடிகை நக்மாவை நியமித்ததும், அவருக்கு தமிழகம், புதுச்சேரி என, இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாத்திமா ரோஸ்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    நக்மாவிற்கு ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    ×