search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "rains"

  • நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன.

  கொடைக்கானல்:

  கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பிவிட்டது.

  இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் மேல்மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையத்துக்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மன்னவனூர், பூம்பாறை ஆகிய மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான பகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிலச்சரிவை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இதே போல் இரவு முழுவதும் நீடித்த மழையால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையான அப்சர்வேட்டரி செம்மண் மேடு பகுதியில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் போக்குவரத்து சீரானது.

  கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சிபட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன. இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு-மூலக்கடைஇடையே மலைப்பாதையில் மரக்கிளை முறிந்து விழுந்தது.

  இதனால் அப்பகுதியில் உள்ள 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன. இதனால் மூலக்கடை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, உதவிசெயற் பொறியாளர் மாணிக்கம், அய்யம்பாளையம் உதவிமின் பொறியாளர் செல்லகாமாட்சி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இன்று மின் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ஆங்காங்கே மலைபாதையில் முறிந்து விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றி வருகின்றனர். தற்போது மழை குறைந்திருந்தாலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  நேற்று கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். 

  • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
  • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

  திருவள்ளூர்:

  மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

  • ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
  • நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பள்ளிபாளையம்:

  பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராள மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவார்கள்.

  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

  தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து அதிகரித்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் தற்போது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

  நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு
  • திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை மற்றும் காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

   குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • இரவில் இருந்து மழை இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
  • மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்த போதிலும், இன்று காலை மழை இல்லை.

  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

  இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் சென்னை, கோவை, நாமக்கல், ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

  • சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை
  • மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

  சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  இந்த நிலையில் குமரி கடலோர மற்றும் அதன் தென்கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிகமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  மேலும், காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

  • வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
  • தொடர் கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தேனி, திருப்பூர் மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

  மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை.
  • நாகை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

  தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  இன்று மதியத்திற்கு மேல் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது.

  நாளை 13 மாவட்டங்களில் கனழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • வயலில் பெண் ஒருவரின் இடுப்பு சேலையில் சொருகி வைத்திருந்த செல்போன் வெடித்தது
  • ராணுவ வீரர் வயலில் வேலை பார்த்தபோது மின்னல் தாக்கி உயிரிழப்பு

  தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலரட் விட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

  இதனால் சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இடி மின்னல் தாக்கி ஐந்து பேர் பலியான நிலையில், செல்போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.

  மதுரை மாவட்டம் கீரனூரை சேர்ந்த பெண் ஒருவர் காலமானர். அவரது இறுதிச் சடங்கு மயானத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது, திடீரென் இடி தாக்கியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  திண்டுக்கல் மாவட்டம் கீரண்கோட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான விஜயலட்சுமி என்ற பெண், வீட்டின் முன் வைத்திருந்த பொருட்களை எடுக்க சென்றபோது இடி தாக்கி பரிதாபமாக உயிரழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேவிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் ராணுவத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த அவர், வயலில் வேலைப்பார்த்தபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி அருகே 3 பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் தனது இடுப்பு சேலையில் செல்போனை சொருகி வைத்திருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில், சேலையில் சொருகி வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். இதை அருகில் இருந்து பார்த்த இருவர் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தனர். காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்தது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.

  ஆனால், இன்று காலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளது.

  சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.