என் மலர்tooltip icon

    மியான்மர்

    • மியான்மரின் சாங் யூ நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
    • போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

    • பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மியான்மரில் வருகிற டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 28-ந்தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாட்டில் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள், சிறுபான்மை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய உடனே தற்காலிக அதிபராக மியிண்ட் ஸ்வே பொறுப்பேற்றார்.
    • மியிண்ட் ஸ்வே மறைவுக்கு ராணுவ ஆட்சி தலைவர் மின் ஆங் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை ராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.

    இதற்கிடையே ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய உடனே தற்காலிக அதிபராக மியிண்ட் ஸ்வே பொறுப்பேற்றார். பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா்.

    இந்த நிலையி்ல் தலைநகர் நேபிடாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. மியிண்ட் ஸ்வே மறைவுக்கு ராணுவ ஆட்சி தலைவர் மின் ஆங் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
    • ராணுவத்தினருக்கு எதிரான மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த 2020-ல் கடைசியாக தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி பெரிய வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி 2021-ம் ஆண்டு அரசைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார்.

    அவசர நிலையை அறிவித்து ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தலில் மோசடி நடைபெற்றதால்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டாக உள்ள ராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
    • நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் போராடி வருகின்றனர்.

    பாங்காக்:

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.

    நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்தக் குழுக்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

    இந்நிலையில், மியான்மரின் மத்திய பகுதியில் சகாயிங் பிராந்தியத்துக்கு உட்பட்ட லின்டாலு கிராமத்தில் உள்ள புத்த மடாலயம் ஒன்றில் நேற்று திடீரென ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதில் அங்கே தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் என 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அந்த பிராந்தியத்தில் போராடி வரும் எதிர்ப்பு முன்னணிக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிர் பிழைப்பதற்காக ஏராளமான மக்கள் அந்த மடாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

    புத்த மடாலயத்தில் தங்கியவர்கள் மீது ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் மியான்மர் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
    • இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

    மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்தப் பகுதி ராணுவ ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி இயக்கத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான பள்ளி ஜனநாயக ஆதரவு இயக்கத்தால் நடத்தப்பட்டது. ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு தீவிரமான சண்டை எதுவும் இல்லை.

    தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) இந்த சம்பவத்தை கண்டித்தது.

    மியான்மர் ராணுவம் அரசு ஊடகங்கள் மீதான தாக்குதலை மறுத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.

    மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சாகைங் பகுதியில் இதுபோன்ற தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்துள்ளன. அதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தும் உள்ளனர். 

    • அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
    • தலைநகர் நய்பிடாஸ், மண்டாலே ஆகிய நகரங்கள் உருக்குலைந்து போனது.

    அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து தரை மட்டமானது. தலைநகர் நய்பிடாஸ், மண்டாலே ஆகிய நகரங்கள் உருக்குலைந்து போனது. இந்த நில நடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரம் பேருக்கு மேல் பலியானார்கள்.

    சைபர் தாக்குதல்

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த சைபர் தாக்குதலால் நடுவானில் பறந்த விமானத்தின் விமானிகளுக்கு தவறான தகவல்கள் கிடைக்க தொடங்கியது. இதனால் விமானிகள் குழப்பம் அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அவசரகால சிக்னல்களை பயன்படுத்தி உண்மையான நிலவரங்களை கண்டறிந்தனர்.

    இதையடுத்து இந்த சைபர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.

    • லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
    • உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    மியான்மரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.54 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



    • இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது
    • முன்னதாக கடந்த மார்ச் 28 ஆம் தேதி மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது

    மியான்மரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.02 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

    முன்னதாக கடந்த மார்ச் 28 ஆம் தேதி மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் அதே நாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,600 ஐ கடந்துள்ளது. 5,017 பேர் காயமடைந்துள்ளனர். 148 பேர் மாயமாகி உள்ளனர்.

    • இந்த நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
    • இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    நைபிடாவ்:

    மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,455 ஆக அதிகரித்துள்ளது. 4840 பேர் காயம் அடைந்துள்ளனர். 214 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலநடுக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

    • இந்த நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
    • இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    நைபிடாவ்:

    மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது. 458 பேர் காயம் அடைந்துள்ளனர். 221 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    • இந்த நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
    • இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    நைபிடாவ்:

    மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல், தாய்லாந்தில் நிலநடுக்கத்தில் மாயமான 100-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    ×