என் மலர்tooltip icon

    உலகம்

    மியான்மரில் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல்: 34 பேர் பலி
    X

    மியான்மரில் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல்: 34 பேர் பலி

    • பொது மருத்துவமனையை குறிவைத்து ராணுவ போர் விமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    பாங்காக்:

    மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    மருத்துவமனையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன.

    மருத்துவமனை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    Next Story
    ×