என் மலர்
நீங்கள் தேடியது "Emergency"
- இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மக்கள் தொடர்பு கொள்ள, அவசர உதவிக்கு 7299004456, மருத்துவ தேவை 9384814050, கால்நடை பாதிப்பு 1962 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
- கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளது.
- மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
- வரும் 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாவதாக தகவல்.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.
அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வருகிற 24-ந்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
- ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
- ராணுவத்தினருக்கு எதிரான மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
நேபிடாவ்:
மியான்மரில் கடந்த 2020-ல் கடைசியாக தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி பெரிய வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி 2021-ம் ஆண்டு அரசைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார்.
அவசர நிலையை அறிவித்து ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலில் மோசடி நடைபெற்றதால்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டாக உள்ள ராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- இதைச் செய்தவர்கள் இன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுடன் வலம் வருகின்றனர்.
- உங்கள் மூதாதையர்கள் இதைச் செய்தார்கள். இதற்காக நீங்கள் நாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து 'சோசலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' (socialist and secular) என்ற வார்த்தைகளை நீக்க ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே வலியறுதியுள்ளார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் அரசால் முகப்புரையில் சேர்க்கப்பட்ட 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் தொடர வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று ஹோசபலே வலியுறுத்தினார். இந்த வார்த்தைகள் 1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் சேர்க்கப்பட்டன.
மேலும் அவசரநிலையை திணித்ததற்காக காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹோசபலே வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு, "இதைச் செய்தவர்கள் இன்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுடன் வலம் வருகின்றனர். அவர்கள் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. உங்கள் மூதாதையர்கள் இதைச் செய்தார்கள். இதற்காக நீங்கள் நாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.
மத்திய பாஜக அரசு புதன்கிழமை, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50வது ஆண்டு நாளான ஜூன் 25ஐ 'சம்விதான் ஹத்யா திவாஸ்' (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது.
- மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை.
நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கொண்டு வந்த நிலையில், அவசரநிலை தினத்தை பாஜக கையில் எடுப்பது, அரசின் தோல்வியை மறைப்பதற்கானது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
இந்தியா சுதந்திரம் பெற்றதில் மற்றும் அரசியலைப்பு உருவாக்கப்பட்டதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு ஏதும் இல்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பை நிராகரித்தன. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறது அதை கையில் எடுத்து, அரசியலைப்பை பாதுகாப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை. அரசியலமைப்பு பாதுகாப்போம் எனப் பேசிக் கொண்டிருப்பவர்கள், தற்போது 50 வருடத்திற்குப் பிறகு எம்ர்ஜென்சியை கையில் எடுத்துள்ளனர். சிலர் இதை மறந்திருப்பார்கள். இவர்கள் தோண்டி எடுக்கிறார்கள்.
மனுஸ்மிருதியின் கூறுகள் போன்ற நம்முடைய கலாசார அம்சங்கள் இல்லை என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பை நிராகரித்தன. இதை செய்த அவர்களுக்கு தற்போது ஞானமடைந்துள்ளனர்.
இவர்கள் ஆட்சியில் தோல்வியடைந்துள்ளனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு பதில் அளிக்காதது, ஊழல், பொருளாதார தோல்வி குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர். பொய்கள் மற்றும் தோல்வியை மறைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
பொருளாதார சமநிலை மிகப்பெரிய அளவில் இடைவெளி பெற்றுள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலையை கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி எமர்ஜென்சி அறிமுகம் செய்யப்பட்டது.
- எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-ம் ஆண்டு நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.
புதுடெல்லி:
இந்தியாவில் 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி எமர்ஜென்சி அமல் செய்யப்பட்டது.
இந்நிலையில், எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-ம் ஆண்டு நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது எமர்ஜென்சியின் போது சிறையில் இருந்த சுமிதா ஆர்யா என்ற பெண்மணி மேடைக்கு வரவழைக்கப்பட்டார். மேடையேறி வந்த அந்த பெண்மணியின் காலில் விழுந்து அமித்ஷா ஆசி பெற்றார்.
அதன்பின், அந்தப் பெண்மணிக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தொடர்ந்து, அவருக்கு அரசியல் சாசன புத்தகத்தையும் வழங்கி சிறப்பித்தார்.
சுமிதா ஆர்யா என்ற பெண்மணி எமர்ஜென்சியின் போது தனது 3 குழந்தைகளுடன் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
- சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது
தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.

சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

- கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்திற்காக நாடாளுமன்றத்தில் படபிடிப்பு நடத்த அனுமதி கேட்டு கங்கனா நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

கங்கனா ரணாவத்
இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார். இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை. கங்கனா அனுமதி கேட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்திற்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக கங்கனா தெரிவித்துள்ளார்.
தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

இந்திரா காந்தி - கங்கனா ரணாவத்
இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது. கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படம் குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடித்து விடவில்லை. படப்பிடிப்பை ஆரம்பித்தபோது எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி. சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை.

கங்கனா ரணாவத்
முன்பே சொல்லி இருந்தால் சிலர் எனது நிலையை பார்த்து கவலைப்பட்டு இருப்பார்கள். ஆனால் நான் விழுவதை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும், நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை என்மீது அக்கறை கொண்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
- நடிகை கங்கனா தற்போது 'எமர்ஜென்சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

கங்கனா -ஜி.வி.பிரகாஷ்
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கங்கனா ரணாவத்தின்'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரம்மாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது" என்று கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Composing with @KanganaTeam ji for #emergency songs and bgscore … @manojmuntashir @ManikarnikaFP … waiting for this mammoth of a film to unveil itself soon … pic.twitter.com/DoKvDRIp8F
— G.V.Prakash Kumar (@gvprakash) April 22, 2023
- இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
- இவர் தற்போது முன்னணி கதாநாயகர்களின் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், கள்வன், டியர், அடியே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக இந்தியாவின் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளேன் அதை அவர் தான் அறிவிக்க வேண்டும். அவர் சர்வதேச இயக்குனர். இந்தியாவின் டாப் இயக்குனர் அவர் படத்தில் நான் நடிக்கும் அறிவிப்பை அவரே கொடுப்பார்" என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் எந்த இயக்குனருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.






