search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Propaganda"

    • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் புகளூர் காகித ஆலையில் நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்,

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்து வரும் 25-ந்தேதி சனிக்கிழமை மற்றும் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களி லும் நடைபெறும் சிறப்பு முகாம் குறித்து விளக்குவ தற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்க நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது.இதில் கரூர் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், புகழூர் நகராட்சி அதிகாரி, புகளூர் தாசில்தார் முருகன், செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் சீனிவாசன், பொது மேலாளர் கலைச்செல்வன், துணைப் பொது மேலாளர் இராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    • குளித்தலை அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு நூதன முறையில் பிரசாரம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது குளித்தலை ஆர்.டி.ஓ. ரவி தலைமையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் குடும்பத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வோட் 18 + என்ற அமைப்பில் மாணவர்களை அமர செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது, இதில் குளித்தலை வட்டாட்சியர் மகுடேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வெங்கடேசன், தேர்தல் துணை வட்டாட்சியர் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா , கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மல்லல் கிராமத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் வழித்தடத்தில் போடாத சாலைக்கு கல்வெட்டு வைத்து அரசு நிதியை கையாடல் செய்ததாக சமூக வலைதளங்களில் விஷமிகளால் பரப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கு சட்டப்படி தக்க பதிலடி கொடுப்போம் என்று தி.மு.க திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் க.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பு ல்லாணி ஒன்றியம் மல்லல் கிராமத்தி லிருந்து ஆலங்கு ளம் செல்லும் வழித் தடத்தில் 2022-23-ம் நிதி யாண்டில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பா ட்டு நிதியி லிருந்து ரூ.11 லட்சத்து 92 ஆயிரம் செலவில் சாலை அமைப்பதற்காக திட்ட மிடப்பட்டது.

    பல்வேறு அலுவல் காரணமாக அந்த பணியானது தொடர்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த சூழலில் பணிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பணி செயல் கல்வெட்டினை அந்தப் பகுதியில் அமைத்து மறைத்து வைத்திருந்த நிலையில் மறைப்பை நீக்கிவிட்டு விஷமிகள் சிலர் அதனை படம் எடுத்து போடாத சாலைக்கு போட்டதாக போர்டு வைத்துள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ் பணிக்கான அடிப்படை ஒப்பந்தம் மட்டுமே பெறப்பட்டுள்ளதோடு பணிக்கான செலவினத் தொகை ஏதும் எடுக்கவோ, விடுவிக்கப்படவோ இல்லாத நிலையில் அலுவல் பிரச்சினை காரணமாகவே இந்த சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இது குறித்து தவறான தகவல் களை பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தன்னுடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் சாலை பணியை முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது தொடர்பாக தெற்கு மல்லல் கிராமத் தலைவர் பொ.செல்லக் கருங்கு கூறிய தாவது:-

    சம்பந்தப் பட்ட வழித் தடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்பது தங்களு டைய நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் எடுத்து ரைத்ததோடு,அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த இருந்தார். இந்த சூழலில் அவருடைய ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்ததாகவும்,சாலை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் நாங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக அளந்து கொடுக்கிறோம் பிறகு சாலை அமைத்துக் கொள்ளலாம் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலேயே தற்காலிகமாக அந்த சாலை பணியானது நிறுத்தப்பட்டது.

    அதற்கிடையில் தி.மு.க அரசுக்கும், எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராம லிங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கில் சிலர் தவறாக சித்தரித்து சமூக வலை தளங்களில் பரப்பி யுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உதயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்காடி வருகிறார். விரைவில் எங்களுக்கான சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சங்கராபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் கேலிச் சித்திரமாக 10 தலை ராவணன் அவதாரத்தில் ராகுல் காந்தியை வரைந்து லட்சகணக்கான பாரதீய ஜனதாசமூக வலைதள குழுக்களில் வாயிலாக வெளியிட்டு வெறுப்பு பிரச்சாரத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் , பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷா பி ஜாகீர், மாவட்ட துணைத் தலைவர் இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது. நகரத் தலைவர்வக்கீல் முகமது பாஷா வரவேற்றார். மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் அதில் கான் தலைமையில் கண்டன உரையாற்றி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

    • தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை.
    • தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பா.ஜனதா கட்சி தமிழகத்தில் புதிய அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாற பா.ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மூலம் செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். மேலும் தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

    தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார். குறிப்பாக மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காத பெண்களிடம் பேசி அவர்களது ஆதரவை பா.ஜனதா பக்கம் திருப்ப வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை. அந்த 80லட்சம் பெண்களிடமும் பா.ஜ.க. நிர்வாகிகள் பேச வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதுதவிர வரும் நாட்களில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு திராவிட கட்சிகளுக்கும் எதிராக அதிக அளவு குற்றச்சாட்டுக்களை வெளியிடவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாக அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.

    • பெரம்பலூரில் மின் ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகம்

    பெரம்பலூர்,

    அனைத்து வீடுகளிலும் தற்போதுள்ள மின்சார ரீடிங் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்திட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மின் ஊழியர்களின் வேலையிழப்புகள் குறித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை முன்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மின் ஊழியர்கள் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    • சோழவந்தானில் தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனையின்பேரில் சோழவந்தான் தி.மு.க. இளைஞரணி சார்பாக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, வாடிப் பட்டி ஒன்றிய செய லாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். சோழவந்தான் பேரூர் சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், சோழவந்தான் பேரூர் இளைஞரணி முட்டைகடை காளி வரவேற்றனர். தி.மு.க. பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.

    இதில் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், செல்வராணி, ஜெய ராமச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் லதா, கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், நிஷா கவுதம ராஜா, குருசாமி, முத்து செல்வி சதீஷ், நகர அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மாணவரணி சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பால சுப்பிரமணியன், மேலக்கால் ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் ரவி, சங்கங்கோட்டை சந்திரன், தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
    • பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கமுதி பால்கடை அருகில் மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரசார கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நகர் செயலாளர் எஸ்.ஏ.ஹெச்.பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.

    இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இன்பா ரகு,மதுரை ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.நகர் இளைஞரணி அமைப்பாளர், கீழக்கரை நகர் மன்ற துணைத்தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளருமான வக்கீல் ஹமீது சுல்தான், நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ், பயாஸ்தீன், நயீம் உள்ளிட்டோர் வரவேற்று பேசுகிறார்கள்.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் 2 ஆண்டு சாதனை குறித்து பேசுகின்றனர்.இதில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது ஹனிபா, தொழி லாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் காதர், அவைத் தலைவர் ஜமால் பாரூக்,நகர் துணைச் செயலாளர்கள் ஜெய்னுதீன், முனீஸ்வரன், பாண்டியம்மாள்,நகர் பொருளாளர் சித்திக், மாவட்ட பிரதிநிதிகள் தவ்பீக் ராஜா, லதா கென்னடி, நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், முன்னாள் இளை ஞரணி துணை அமைப்பாளர் கெஜி (எ) கஜேந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி மரைக்கா யர் உள்ளிட்ட நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள்,வார்டு இளைஞரணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் 17-வது வார்டு கவுன்சிலர் செய்யது முகம்மது பயாஸ்தீன் நன்றி கூறுகிறார். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு நகர் இளைஞரணி அமைப்பா ளர் வக்கீல் ஹமீது சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.

    • வருகிற 30-ந் தேதி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்.
    • போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையான நிதியை குறைத்து வழங்கியுள்ள மத்திய அரசை கண்டித்து வருகிற மே 30-ந் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை அடுத்த பாண்டி, வேப்பஞ்சேரி ஊராட்சி மற்றும் மங்கலூர் கிளைகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அன்பு செல்வம், சுப்ரமணியன், மங்கல் சம்பத், காசிநாதன் ஆகியோர் சந்தித்து போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    அப்போது, பாண்டி ஊராட்சியில் 20-க்கும் மேற்ப்டட தொழிலாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கு நிதி அளித்து பாராட்டினர்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெருமுனை பிரசாரம் நடைபெற்றது
    • இதற்கு ஒன்றிய செயலாளர் திலகர் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஆலங்குடி வடகாடு முக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பா.ஜ.க. ஆட்சியை கண்டித்தும், நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவோம் என்று தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் திலகர் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் முருகன், முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவாறு நடை முறைப்படுத்தப்படாதது குறித்து மக்களிடையே தெரிவிக்கும் விதமாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் இந்திராணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் இந்திராணி மற்றும் ஒன்றிய குழு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்.
    • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம், மாற்றத்தை நோக்கி அனைத்து மக்களையும் அணி திரட்டுவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பயண பிரசார இயக்கம் இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி 2-ம் நாள் பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் பிரசார இயக்கத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.

    இந்த பிரசார இயக்கத்தில், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, செல்வகுமார், மாநகர நிர்வாகிகள் மூர்த்தி, கல்யாணி, ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மாரிமுத்து, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா நன்றி கூறினார்.

    புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில்  பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது. 

    ஜவுளி உற்பத்தியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று, பிரசாரத்தை தொடங்கி வைத்தார். புகையிலை பாக்கெட், பீர் பாட்டில் போன்று வேடமிட்டு வந்து பிரசாரம் செய்தனர்.

    பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் வழங்கினர். இதற்கான பிரசார வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    ×