என் மலர்
நீங்கள் தேடியது "DMK MP Kanimozhi"
- 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை.
- தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கின் தீர்ப்புக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து தி.மு.க. எம்பி கனிமொழி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.
கடந்த டிசம்பரில் நடந்த நிகழ்வில் மிகத் துரிதமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, விசாரணையை முடித்து, குற்றவாளிக்குத் தண்டனையையும் கொடுத்திருக்கிறது தமிழகக் காவல் துறை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை அதே செய்யப்பட்டார். உடனே குற்றவாளி ஞானசேகரனை போலீஸ் கைது செய்தது.
3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு, வழக்கை விசாரித்தது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது, ஏற்கெனவே ஞானசேகரன் மீதான திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல வழக்குகளையும் காவல் துறை விசாரித்தது. மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது.
தினந்தோறும் என்ற அடிப்படையில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ விசாரணையை கேட்டபோது, 'சிபிஐ விசாரணை தேவையில்லை' என டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, "இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்' என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது.
அன்றைக்குத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக் கொணராமல் போயிருந்தால் அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு விவகாரத்தை மூடி மறைத்திருக்கும். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கைப் பதியாமல் இழுத்தடித்ததோடு பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனையே தாக்க முயன்றார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
2019 பிப்ரவரி 24 கல்லூரி மாணவி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.
2019 மார்ச் 4- முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது.
2019 மார்ச் 12 - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்.
2019 ஏப்ரல் 27 - வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.
2019 மே 21- முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
2021 ஜனவரி 6-இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்.
2023 பிப்ரவரி 24 சாட்சி விசாரணை தொடங்கியது.
2024 பிப்ரவரி 23 குற்றவாளிகள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை நடைபெற்றது.
2025 மே 13- தீர்ப்பு.
2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சிபிஐ.
ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
- நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.
பயங்கரவாதத்திற்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையில், ஈடுபட 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
அதன்படி, பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துரைக்க கனிமொழி தலைமையில் குழு ரஷ்யா, ஸ்பெயின் செல்ல உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.
ஒத்துழைப்பு நல்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தந்த பிரதமர் மோடி, அமைச்ர் உள்ளிட்டோருக்கு நன்றி.
நாட்டின் நலனை பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நிர்வாகம் பற்றிய எந்த அரசியல் அடிப்படை தெளிவும் இல்லாத சிலர் ஆட்சி அமைப்போம் என்கின்றனர்.
- திசை திருப்பி ஏமாற்றுவோர் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மறைமுகமாக சாடி பேசினார்.
அப்போது, "நிர்வாகம் பற்றிய எந்த அரசியல் அடிப்படை தெளிவும் இல்லாத சிலர் ஆட்சி அமைப்போம் என்று பேசுகின்றனர்" என்று திமுக எம்.பி. கனிமொழி தமிழக வெற்றிக் கழகத்தை சாடி பேசியுள்ளார்.
மேலும், "ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதைச் செய்வோம் என மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர்.
திசை திருப்பி ஏமாற்றுவோர் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்" என்றும் தவெக தலைவர் விஜய் குறித்து மறைமுகமாக சவால் விடுத்துள்ளார்.
- அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
- திமுக எம்பி கனிமொழி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அப்போது அவர்," அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்றார்.
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக- பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கனிமொழி ஆதங்கத்துடன் பதில் அளித்தார்.
அப்போது அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத் தலைவராக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒருவருக்கு எத்தனை முறை தண்டனை தருவது என்ற கேள்வி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
- பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்.
- பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?
அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.
பவன் கல்யாணின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜகவுடனான கூட்டணிக்கு முன்பாக Go Back Hindi என பவன் கல்யாண் பேசியதை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக கூட்டணிக்கு முன்பு, "நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என 2017ல் பவன் கல்யாண் தெரிவித்திருத்திருந்தார்.
மேலும் அந்த பதிவில், " மொழிபேதங்களை கடந்து திரைப்படங்களை காண தொழில்நுட்பம் வழிவகை செய்துள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கில் ஜூன்4ம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.






