search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamphlet"

    • புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.
    • மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    மன்னார்குடி:

    மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு பூந்தோட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 285 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உலகராஜ், சிவராஜ் ஆகியோர் முது கலை இயற்பியல் ஆசிரியர் அன்பரசு வழிகாட்டுதலில், சமூக வலைதளங்களில் ஏற்படுகிற கற்றல் குறைபாடு எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.

    இந்த கட்டுரை புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.

    மன்னார்குடி பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    அந்த ஆய்வில் 80 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சமூக வலைதளங்களில் செயல்பாட்டாளர்களாக இருப்பதும், அதற்காக தினமும் 5 மணி நேரம் வரை செலவிடுவதும் கண்டறியப்பட்டது.

    சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படுகிற உளவியல் பிரச்சனைகள் குறித்தும், கற்றல் குறைபாடு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    மேலும்,ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செல்போன்களை மாணவர்கள் பயன்படுத்தினால் அவை சுவிட்ச் ஆப் ஆகிவிடுவது போலவும், அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் அதன் உயரும் வெப்ப நிலைக்கு தகுந்தவாறு அவை குறிப்பிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி விடுவது போன்ற தீர்வுகள் ஆய்வில் முன்வைக்கப்பட்டது.

    முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திலகர் பாராட்டினார்.

    • விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக சென்றனர்.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைப்பெற்றது.

    மாவட்ட குற்றவியல் நீதிபதி கார்த்திகா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்றனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து குழத்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கண் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் மூலம் பணி செய்ததாலும், குழந்தைகள் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்ததாலும் அவர்களுக்கு பார்வை குறைபாடு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    எனவே, குறிப்பிட்ட சில மணி நேரம் ஓய்வு அளித்தால் தான் கண்களை பாதுகாக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, கண் பாது காப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, திருவாரூர் மாவட்ட தேசிய பசுமை படை, பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மாசில்லா இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் தலைமையில் நடைபெற்றது.

    பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு சுற்றுச்சூழலையும், நீர் நிலைகளைகளையும் பாதுகாப்போம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரவி, வசந்த், முன்னாள் கவுன்சிலர் மெய்கண்ட வேல், ஆசிரியர் மனோன்மணி, ராஜ்குமார், சண்முகம், தொழிற்சங்க பொறுப்பாளர்கள் காளிதாஸ், ராஜப்பன், விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
    • .மு.க. ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட அரசின் சாதனை விளக்க துண்டு பிரசு ரங்களை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் செஞ்சடை நாதபுரம் ஊராட்சி தலைவர் லிங்கராஜ், எஸ்.தரைக்குடி ஊராட்சி தலைவர் முனிய சாமி, ஆர்.சி.புரம் கிளை செயலாளர் பிரான்சிஸ், கன்னிராஜபுரம் ஊராட்சி செயலாளர் நீதி வேந்தன், தெற்கு நெருப்பியூர் ஊராட்சி செயலாளர் யாகியா கான், வெட்டுக்காடு ஊராட்சி செயலாளர் சண்முகம், சாயல்குடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் நாகரத்தினம், மின்னல் கூட்டுறவு அமைப்பு தலைவர் முருகன், கன்னி ராஜபுரம் கண்ணன், முருகன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • துண்டு பிரசுரம் வழங்கி மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்வாரிய அதிகாரிகள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மின்சார வாகனங்களை பயன்ப டுத்துவதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்க ளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் அதிக ளுக்கான எரிபொருள் செலவு பன்மடங்கு குறைவாக இருக்கும், சுற்றுச்சூழ லுக்கு உகந்ததாக இருக்கும்.

    விபத்து க்களின் போது மின்சாரம் தானாக துண்டி க்கப்படும் என்பதால், தீப்பற்றும் வாய்ப்பு இருக்காது. மேலும், பெட்ரோல் கார்களுக்கு இணையான கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    எலக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் மின்சார வாகனங்க ளில் உள்ள பாதகங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பேரணி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா முன்னிலை வகித்தார்.

    பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.

    இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம்,ஆசிரியர்கள் அகல்யா, பொற்கொடி, கீதா,வளர்மதி ஆகியோர் திட்டச்சேரி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்ட மைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

    • மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
    • அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார் .

    நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவு க்கரசு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர்ரா மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இப்பிரச்சார வாகனம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க ப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்து கிறது. மேலும் பொது மக்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவ ர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிர சுரங்கள் வழங்கப்படுகிறது.

    அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    • ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொது மக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தரப்பி னர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலை யில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கோர்ட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், பிரச்சினைகளை விரைவாக கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளை பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகள் எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சு வார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சி யங்களாக பயன்படுத்து வதில்லை. எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும்.

    மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடை யாது என்பது போன்ற விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.

    • குத்தாலம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் இயங்கும் தேசிய பசுமைப் படையின் சார்பாக பள்ளியைச் சுற்றியுள்ள குத்தாலம் மேலத்தெரு நடுத்தெரு கீழத்தெரு மற்றும் கழுங்கடித் தெரு ஆகிய பகுதிகளில் மக்களிடையே பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இலா செல்லம்மாள் பேரணியை துவங்கி வைத்தார்.

    பள்ளியின் தேசிய பசுமைப் படையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் அங்குள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    பேரணிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் தேசியப் பசுமை படையின் ஒருங்கிணைப்பாளர் ஐ.சந்தோஷ் காட்சன் ஐசக் ஆசிரியர் செய்திருந்தார்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.
    • ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பினர்.

    தொடர்ந்து எச்சரித்து அனுப்பியும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

    பள்ளி குழந்தைகளுடன் வந்த பெற்றோரை நிறுத்தி, அவர்கள் குழந்தைகளிடம், உங்கள் அப்பாவிற்கு ஹெல்மெட் அணியாததால் நாங்கள் போடும் ரூ.1000 அபராத தொகை தேவையா என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்டு இனி வரும் நாட்களில் உங்கள் அப்பா ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி அனுப்பினர்.

    • மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம்.
    • 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.

    மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை கடைத்தெருவில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு இருப்பதை அறிந்த பா.ஜ.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் நகர பொறுப்பாளர் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    அப்போது காவல் நிலையம் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய போலீசார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×