search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரம்
    X

    பஸ் பயணிகளுக்கு இந்தி திணிப்புக்கு எதிராக மேயர் சண். ராமநாதன் துண்டு பிரசுரம் வழங்கினார்.

    பொதுமக்களிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரம்

    • பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார்.
    • இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக பொதுக்கூட்டத்தை விளக்கியும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தஞ்சையில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார். இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என முழக்கங்கள் இட்டு அனைவருக்கும் வழங்கினார்.

    அன்னைத் தமிழை அரியணை ஏற்றி போற்றுவோம், ஆதிக்க இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர். இந்த நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×