என் மலர்

  நீங்கள் தேடியது "wildfire"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். #California #Wildfire
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கேம்ப் கிரீக் என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத்தீயானது கொளுந்து விட்டு எரிகிறது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் சில மணி நேரத்திலேயே (நேற்று முன்தினம் மதியம் வரை) 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி விட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.

  இந்த காட்டுத்தீ திடீரென பரவியதால் பலர் வாகனங்களையெல்லாம் சாலைகளில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.  தீ பரவி வருகிற பகுதிகளில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அங்கு பாரடைஸ், மகாலியா, கான்கவ், பட்டி கிரீக் கேனியான், பட்டி வேலி பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி சிலர் உயிரிழந்து விட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. தீயை அணைப்பதற்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர்.

  தீ பரவி வருகிற பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நெருக்கடி கால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.  #California #Wildfire 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரீஸ் நாட்டில் மூன்று நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீயை மீட்புக்குழுவினர் அணைத்த நிலையில், இதுவரை 80 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #GreekFires
  ஏதென்ஸ்:

  கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் மரக்காடுகளில் திங்கள் கிழமை மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரையில் பரவியது. சுற்றுலாப் பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், கார்கள் தீ பிடித்து எரிந்தது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தனர். 

  தீ விபத்து சம்பவத்தில் 80 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது, எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

  காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் நாசம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் அரசு போராடி தீயை அணைத்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் சாம்பலாக காணப்படுகிறது.

  இப்போது மாயமானவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தவர்கள், தப்பி ஓட முயற்சித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவரவில்லை. அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெறுகிறது. 1500க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

  கிரீஸ் நாட்டில் 2007-ம் ஆண்டு மிகப்பெரிய தீ விபத்து நேரிட்டது, அப்போது 70 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்போது காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல்பாடே தீ விபத்துக்கு காரணம் என கூறும் கிரீஸ் அமெரிக்காவிடம் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் அடங்கிய ட்ரோன்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். #GreeceForestFires
  ஏதென்ஸ்:

  கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. 

  தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி ஓடினர். எனினும் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.

  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டர். 

  முதல் கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர் என்றும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது.

  தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #GreeceForestFires
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடக்கு இங்கிலாந்தில் காட்டுத் தீ பரவி வருவதால் அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  லண்டன்:

  இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர் அருகே காட்டுத் தீ பரவி வருகிறது. கடும் வெப்பநிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று டவ்ஸ்டோன்ஸ் நீர்த்தேக்கம் அருகே தீப்பிடித்து, பின்னர் அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவியது. சுமார் 6 கிமீ தொலைவுக்கு தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 10 தீயணைப்பு வாகனங்களில் சென்றுள்ள 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். 

  இது ஒருபுறமிருக்க, காட்டு தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 34 வீடுகளில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

  காட்டுத் தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், கரும்புகை காரணமாக பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல் கதவுகளை மூடி வைக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இன்று அப்பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #tamilnews
  ×