search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death toll"

    • தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன.
    • தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் கடந்த 15ம் தேதி அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    சம்பவத்தன்று தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    மேலும், தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. மேலும் சில குழந்தைகள் இறந்தன.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தன. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை 17ஆக உயர்ந்துள்ளது.

    • புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இல்லை:
    • இதனால் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்தது. இதையடுத்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையைக் கடந்தது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

    அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன.

    ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். இதேபோல் புளோரிடா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹெலன் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சூறாவளியின் பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

    புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன. பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    • வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    பெய்ரூட்:

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

    இதில் 9 பேர் உயிரிழந்தனர். 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

    இதற்கிடையே, லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், வீடுகளில் இருந்த சோலார் பேனல்கள் உள்பட சில மின் சாதனங்களும் வெடித்ததாக தகவல்கள் வெளியாகின.

    இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது.

    • யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது.
    • யாகி புயல் இந்த ஆண்டின் மிக வலிமையான புயல்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டது.

    நேபிடோவ்:

    தென்சீனக் கடலில் உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது.

    இந்தப் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது.

    இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

    • உயிரிழந்த 16 பேரில் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, 2 குழந்தைகளும் அடங்கும்.
    • அவரது மகள் உட்பட 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் மன்சூர் (42) என்ற நபர் தன் குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து தவித்து வருகிறார் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.

    உயிரிழந்த 16 பேரில் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, 2 குழந்தைகளும் அடங்கும். உயிரிழந்த 16 பேரில் தாய், மனைவி, தங்கை, மகனின் உடல்கள் மட்டுமே தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் உட்பட 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்டபோது மன்சூர் வெளியூருக்கு சென்றதால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.

    "இந்த நிலச்சரிவு என் ஒட்டுமொத்த உலகத்தையும் அடித்து சென்றுவிட்டது. என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு உள்ளிட்ட அனைத்தும் என்னை விட்டு சென்று விட்டது" என்று தன் கும்பத்தை இழந்து தவித்து வரும் மன்சூர் பெரும் சோகத்தோடு தெரிவித்தார்.

    • உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசனை.
    • நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ளது.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று 6ம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது.

    மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

    இதற்கிடையே, மீட்பு பணியின் போது அந்த பகுதிகளில் உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும், மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.
    • மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.

    மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.

    மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • காசா சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது.
    • இந்தப் போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த 9 மாதமாக நடந்து வரும் போரில் சுமார் 38,011 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 87, ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்தப் போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா.சபையும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

    அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

     

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

     

    அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

     

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.

    சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி ஏமத்தூரை சேர்ந்த சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
    • 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 47 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர்.

    அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கள்ளச்சாராய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தன. இந்த வரிசையில், தே.மு.தி.க. சார்பில் ஜூன் 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக ஜூன் 25, செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது."

    "இதில் மாவட்ட கழக செயலாளர்கள் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணி பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் அன்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதி.
    • அரசியல் தலைவர்கள் கள்ளக்குறிச்சி விரைந்தனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுவரை 100-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த இரு நாட்களாக கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் மற்றும் பலர் கள்ளக்குறிச்சி விரைந்தனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோகை சந்தித்து உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

    ×