என் மலர்
நீங்கள் தேடியது "Morocco"
- லூக்கோஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
- சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மொராக்கோ:
மொராக்கோவில் கடந்த சில வாரமாக கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு பெய்த கனமழையால் கசார், எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
லூக்கோஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சார், எல்-கெபிர் நகரில் மட்டும் சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்டு வறட்சிக்குப் பிறகு பெய்துள்ள இந்த கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
- செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
- செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கேப்டவுன்:
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 18-ந்தேதி இரவு மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் வாக்குவாதம் செய்த செனகல் வீரர்கள் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. சமாதானத்திற்கு பிறகு மீண்டும் களம் திரும்பிய செனகல் வாகை சூடியது. ஆனால் ஆட்டத்தின் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்தது.
இந்த நிலையில் இது குறித்து விசாரித்த ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், வீரர்களின் மோசமான நடத்தைக்காக செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
மேலும் விளையாட்டின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு 5 ஆப்பிரிக்க போட்டிகளில் பணியாற்ற தடையும், ரூ.92 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் ஒழுங்கீன செயலுக்காக செனகல் வீரர்கள் லிமன் என்டியாயே, இஸ்மைலா சர் ஆகியோருக்கு 2 ஆப்பிரிக்க போட்டிகளிலும், மொராக்கோ கேப்டன் அச்ரப் ஹாகிமிக்கு 2 போட்டிகளிலும், இஸ்மைல் சாய்பரிக்கு 3 போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தன.
- இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும்.
மொராக்கோவின் 2வது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்து நேற்று பெரும் விபத்து ஏற்பட்டது.
அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தர். மேலும் 16 பேர் காயங்களுடன் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளுக்கும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொங்க உள்ளது.
இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும். முன்னதாக மொராக்கோவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் 10 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.
மொரோக்காவில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவவரை 1037 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1200 பேர் கயாமுற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் பற்றி வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் அதனை பகிர்ந்து கொண்டார். இது குறித்த பதிவில், "மொரோக்கா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எனது நினைவுகள் முழுக்க பாதிக்கப்பட்ட மொரோக்கா மக்களுடனேயே உள்ளது. இதில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமுற்றவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். இந்த கடினமான சூழ்நிலையில், மொரோக்காவுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என்று தெரிவித்து இருக்கிறது. நிலநடுக்கம் சில நொடிகள் வரை நீடித்தது இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
- அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின.
பாரீஸ்:
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. ஆனால் கால்பந்து, ரக்பிசெவன்ஸ் போட்டிகள் நேற்று தொடங்கின.
கால்பந்து போட்டியில்'ஏ' பிரிவில் நடந்த ஆட்டம் ஒனறில் பிரான்ஸ்-அமெரிக்கா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் சீனியர் அணியை தோற் கடித்தது.
'டி' பிரிவில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இஸ்ரேல்-மாலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டி னா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டம் ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
ரக்பி செவன்ஸ் போட்டி யில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றன. வில் வித்தை, ஹேண்ட்பால் போட்டிகள் இன்று தொடங்கியது.
வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் தீபக், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் மற்றும் வீராங்கனை பஜன்கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் முப்படைகளின் தலைவராக மன்னர் விளங்கி வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன.
பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட மந்திரிசபை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.
சுமார் மூன்றரை கோடி மக்கள் வாழ்ந்துவரும் மொராக்கோவின் முதன்மை மதமாக இஸ்லாம் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அராபிய - பெர்பர் வம்சாவளியினராவார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கு பின்னர் மன்னர் கையொப்பமிட்ட பின்னர் இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது. #Morocco ##Moroccomilitary








