என் மலர்
நீங்கள் தேடியது "Kamalhaasan"
- நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது.
- போலியான விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போலி விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சி.இ.ஓ நாராயணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது செய்யப்பட்ட சுதாகர் மற்றும் புகழேந்தி
இந்நிலையில், கடலூரை சேர்ந்த புகழேந்தி மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் பல வாட்ஸ்அப் குழுக்கள் வைத்து டிரெய்டிங் ஆலோசகராக செயல்பட்டு வந்துள்ளனர். இதில் பலர் பணத்தை இழந்ததால் இந்த பணத்தை மீட்பதற்கு இவர்கள் போலியான விளம்பரம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரங்களை பரப்பி சுமார் மூவாயிரம் பேரிடம் ரூ.10 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
- பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக உள்ளது.
- இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதையடுத்து ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 1 முதல் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதனை புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் 'இரண்டுல ஒன்னு பாத்தர்லாம்' என்று கூறியிருப்பார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- கமல்ஹாசனின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.
- இப்படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் 233-வது படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இராணுவ பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் கமல்ஹாசன் முன்னாள் இராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
- நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார்.
- இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து (58) நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2023
ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/ryN5EmskHD
- நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன்-2 ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- கமலின் அடுத்த படத்தை எச். வினோத் இயக்குகிறார்.
நடிகர் கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-வது படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் முழுக்க முழுக்க சமூக அக்கறைக் கொண்ட அரசியல் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சி எடுக்கும் கமல்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கும் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி பயிற்சியுடன் வெறித்தனமாக தயாராகுகிறார். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
Guts & Guns ?
— Raaj Kamal Films International (@RKFI) September 7, 2023
Training Begins #FuriousAction in #KH233#Ulaganayagan #KamalHaasan #RKFI52 #RISEtoRULE@ikamalhaasan #Mahendran #HVinoth@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/Mec86yIhlh
- அஜித் நடிப்பில் எச்.வினோத் மூன்று படங்களை இயக்கினார்.
- ’துணிவு’ திரைப்படம் எச்.வினோத்திற்கு மையில்கல்லாக அமைந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எச்.வினோத் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் எச்.வினோத் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கினார். இதில், 'துணிவு' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய மையில் கல்லாக அமைந்தது. தற்போது கமல்ஹாசனின் 233-வது படத்தை இவர் இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இப்படி குறுகிய காலத்திலேயே திரைத்துறையில் தன் பெயரை நிலைநாட்டிய இயக்குனர் எச்.வினோத் இன்று தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் எச். வினோத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

நடிகர் ஷாருக்கான், ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்து வந்தார். இதில் நடிகர் கமல்ஹாசன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "கமல் மிகவும் அன்பானவர். எல்லா நடிகர்களுக்கும் அவர் உத்வேகமாக இருக்கிறார்" என்று பதிலளித்தார்.
He is too kind and a friend and inspiration for every actor. #Jawan https://t.co/qCZEcE5XRA
— Shah Rukh Khan (@iamsrk) September 3, 2023
- பிக்பாஸ் 7-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
- இந்த சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கவுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதையடுத்து ஏழாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசனின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அருண் வீரப்பன்.
- 90 வயதான அருண் வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
பழம் பெரும் தயாரிப்பாளரான ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளை அருண் வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
ஏ.வி.எம். தயாரித்த படங்களின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய அருண் வீரப்பன் 100-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். இவர் 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.
90 வயதான அருண் வீரப்பன் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அருண் வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன்.
நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி" என்று பதிவிட்டுள்ளார்.
- மறைந்த நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
- தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது 'கடைசி விவசாயி'படத்திற்கும், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.

கமல்ஹாசன் பதிவு
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு நடிகர் எனும் புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கும் அல்லு அர்ஜூன், சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்" திரைப்படத்தின் இயக்குனர் ஆர். மாதவன் மற்றும் குழுவினர், பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் குழுவினர், புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசை பிரிவில் விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பெற்ற ஷ்ரேயா கோஷல், சிறந்த கல்வித் திரைப்படம் பிரிவில் "சிற்பங்களின் சிற்பங்கள்" படத்தை இயக்கி விருது வென்றுள்ள இயக்குனர் பி. லெனின், "கருவறை" ஆவணப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தென்னிந்திய சினிமா உள்ளடக்கத்திலும், தொழில்நுட்பத்திலும் பல புதிய உச்சங்களை எட்டியதன் அடையாளம் தேசிய விருதுகளின் பட்டியலில் எதிரொலிக்கிறது. இந்த வெற்றி தொடரட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.