என் மலர்
OTT

ஓடிடியில் வெளியான கமலின் தக் லைஃப் திரைப்படம்
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.
இந்நிலையில் தக் லைஃப் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story