கமலுடன் நடிக்கும் படம்தான் கடைசி படம்: சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் ரஜினி - அதிர்ச்சி தகவல்

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
கமலுடன் நடிக்கும் படம்தான் கடைசி படம்: சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் ரஜினி - அதிர்ச்சி தகவல்
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இப்படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துடன் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறலாம் என்று ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தாவல் வெளியாகியுள்ளது. இப்படத்தியும் கமல்ஹாசனே தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com