என் மலர்
நீங்கள் தேடியது "nelson"
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய், நெல்சன்
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டியில் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது: “கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் பீஸ்ட் படம் இருக்காது. இது வேற மாரி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் யோகிபாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்விக்கு இயக்குனர் பதிலளித்துள்ளார். #Nayanthara
பெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?' என்பது தான். இந்த டாபிக் மிகப்பெரியதாக மாறி, மற்ற படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கூட குறிப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன், ஆகஸ்ட் 17ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாகும் கோலமாவு கோகிலாவுக்காக காத்திருக்கிறார்கள். இயக்குனர் நெல்சனிடம் அதற்கான விடையை கேட்டபோது, "இதுதான் நான் 'கல்யாண வயசு' பாடலில் இருந்து வெட்ட வேண்டிய ஒரே விஷயமாக இருந்தது. இல்லையென்றால் இப்போது உங்களுக்கு உள்ள அந்த ஆர்வம் இருந்திருக்காது. திரையரங்குகளுக்கு வந்து நயன்தாரா யோகிபாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
கோலமாவு கோகிலா படம் எதை பற்றியது என இயக்குனர் நெல்சன் ஓரிரு வார்த்தைகளில் கூறும்போது, "கோலமாவு கோகிலாவில் நீங்கள் தீவிரத்தை, குடும்ப உறவுகளை உணரலாம். பழிவாங்கலில் சேர்ந்து கொள்வீர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்களில் அனுபவிப்பீர்கள், படம் உங்களை சீட்டின் நுனிக்கும் இழுத்து செல்லும்" என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த கோலாமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். நிர்மல் எடிட்டிங் செய்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் முன்னோட்டம். #CoCo #KolamavuKokila #Nayanthara
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா.
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஹரிஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா, ஆர்.எஸ்.சிவாஜி, நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - அனிருத், படத்தொகுப்பு - ஆர்.நிர்மல், ஒளிப்பதிவு - சிவக்குமார் விஜயன், கலை இயக்குனர் - ஏ.அமரன், ஸ்டில்ஸ் - சித்தராசு, ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், வீரா பாபு, மேக்கப் - ஷயீக் பாஷா தயாரிப்பு - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்ஷன்ஸ், எழுத்து, இயக்கம் - நெல்சன் திலீப்குமார்.

தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamavuKokila #Nayanthara
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருபட்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படம் ரிலீசாக இருக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேநாளில் தான் கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படமும் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Mark ✔️ your Calendar 🔥🔥🔥🔥🔥 for #KolamaavuKokila#Nayanthara@anirudhofficial@Nelson_director#CocofromAug10#KabiskabaaCoCopic.twitter.com/fPLxAIq7Yr
— Lyca Productions (@LycaProductions) July 12, 2018
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமந்தாவும் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பாராட்டுக்களையும் பெற்றது. ஜூலை 5-ஆம் தேதி வெளியான இந்த டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த நடிகை சமந்தா நயன்தாராவுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமந்தா தெரிவித்திருப்பதாவது,
`இது கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அற்புதமாக இருக்கிறது. படத்தை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன்' இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
I know I am a little late.. the trailer of #Kolamavukokila is outstanding 👏👏 Can’t wait to watch this film . All the very best to this team and #Nayanthara for having balls of steel 🙏🙏 @anirudhofficial#NelsonDilipkumar
— Samantha Akkineni (@Samanthaprabhu2) July 11, 2018
நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படம் போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
#KabiskabaaCoco - #TheGibberishSong#KolamaavuKokila Trailer & Full Album from July 5th🔥🔥🎼🎹🥁🔥🔥 #Nayanthara@anirudhofficial@Nelson_director@Siva_Kartikeyan@Arunrajakamarajpic.twitter.com/fjw24Wa2Qz
— Lyca Productions (@LycaProductions) July 3, 2018
இந்த நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற ஜூலை 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', `கல்யாண வயசு' என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamaavuKokila #Nayanthara
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #CoCo #Nayanthara
நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்' விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
#KolamaavuKokila#CoCo#Nayanthara@anirudhofficial@Nelson_director#ReleasingSoon 🔥🔥🔥 pic.twitter.com/ZD3jbQqkd7
— Lyca Productions (@LycaProductions) June 28, 2018
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ', கல்யாண வயசு என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாரா தற்போது `கொலையுதிர் காலம்', அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அறிவழகன் இயக்கத்திலும், சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபுவை, நடிகர் விஜய் பாராட்டியிருக்கிறார். #CoCo #YogiBabu
நயன்தாரா அடுத்து நடிக்கும் கோலமாவு கோகிலா படத்துக்காக ஒரு பாடல் வெளியிடப்பட்டு பிரபலமாகி இருக்கிறது. யோகிபாபு நயன்தாராவிடம் காதலை சொல்வதை போல அமைந்திருக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
யோகிபாபு இந்த பாடல் பற்றி கூறியது ‘இந்தப் படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக் கொண்டே இருப்பேன். முன்பு ஒரு நடிகையுடன் பேருந்தில் ஆடி பாடுவது போல எடுத்தபோது அந்த நடிகை என்னை தொட்டு நடிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் நயன்தாராவுக்கு பெரிய மனது என்று சொல்லும் யோகிபாபு, ஒரே நேரத்தில் அஜித், விஜய் என இருவருடனும் நடித்து வருகிறார். பாடலை விஜய் பார்த்துவிட்டு யோகிபாபுவை பாராட்டி இருக்கிறார். விரைவில் அஜித்திடமும் பாடலை காண்பிக்க உள்ளார் யோகிபாபு. #CoCo #YogiBabu #Nayanthara #Vijay
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்காக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். #CoCo #Nayanthara
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக அறிமுகமான சிவா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் `கல்யாண வயசு' என்ற பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகிய `எதுவரையோ' பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

`வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து `எஸ்.கே.13' படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #CoCo #Sivakarthikeyan #Nayanthara #KalyanaVayasu
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த பாடல் குறித்த சர்ப்ரைஸ் வெளியாகி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் படத்தில் இருந்து `எதுவரையோ' என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

`கல்யாண வயசு' என்று துவங்கும் அந்த பாடலை புதுமுக பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருப்பதாகவும், அவர் என்பது சர்ப்ரைசாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியுமா என்றும் படக்குழுவினர் புதிர் வைத்துள்ளனர். இந்த பாடல் வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara