ஜெயிலர் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பை சில தினங்களுக்கு முன்பு ரஜினி நிறைவு செய்ததாக தகவல் வெளியானது.
ஜெயிலர் படக்குழு
ஜெயிலர் படக்குழு
Published on

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜெயிலர் - ரஜினி
ஜெயிலர் - ரஜினி

ஜெயிலர் - ரஜினி

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர். சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நிறைவு செய்ததாக தகவல் வெளியானது.

ஜெயிலர் படக்குழு
ஜெயிலர் படக்குழு

ஜெயிலர் படக்குழு

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com