காத்திருந்தது போதும்.. புதிய அப்டேட்டுடன் களம் இறங்கும் ஜெயிலர் படக்குழு

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் அப்டேட்டை படக்குழு இன்று வெளியிடவுள்ளது.
காத்திருந்தது போதும்.. புதிய அப்டேட்டுடன் களம் இறங்கும் ஜெயிலர் படக்குழு
Published on

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜெயிலர்
ஜெயிலர்

ஜெயிலர்

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காத்திருந்தது போதும் என்றும் குறிப்பிட்டு ஜெயிலர் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com