என் மலர்

  நீங்கள் தேடியது "Lokesh Kanakaraj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  வாரிசு

  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் 'வாரிசு' படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’.
  • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்த்துள்ளனர்.

  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.


  விக்ரம்

  'விக்ரம்' திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் தற்போது வரை சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'விக்ரம்' திரைப்படம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில், "ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100-வது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு எனது அன்பும் வாழ்த்தும்." என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.
  விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. பொதுவாக விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுமே ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கும்.  இருவருமே அதிக அளவில் இளம் இயக்குனர்களுக்கும் புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்கள். ஆனால் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் இவர்களை அணுக முடியாத சூழல் இருந்தது. விஜய் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு சில இளம் இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

  மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவரிடமும் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜிடமும் விஜய் கதை கேட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த வரிசையில் இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்துவும் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ×