search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவின் பாலி"

    • குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. அதன டிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.

    அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

    இருந்தபோதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நடிகரும், இயக்குனருமான பாலச்சந்திர மேனனின் மீது பாலியல் புகார் அளித்தநடிகை மீது கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி நடிகை அவதூறாக பேசியதாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் பாலச்சந்திர மேனன் புகார் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் நடிகையின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நடிகை பாலச்சந்திரமேனன், நடிகர்கள் ஜெயசூர்யா, இடைவேளை பாபு உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
    • ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

    இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14-ந்தேதி முதல் 15-ந்தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

    40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார்.

    மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

    கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

    சதி மற்றும் அதன் பின்னணியில் உள்ள நபர்களை வெளியே கொண்டு வர இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் நிவின் பாலி முடிவு செய்துள்ளார்.

    • அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " நான் என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை கேள்விப் பட்டேன். இது முற்றிலும் பொய்யானது. நான் என் மீது உள்ள நியாயத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். மத்ததெல்லாம் சட்ட ரீதியாக கையாளப்படும்" என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

    பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மலையாள பிரபல நடிகர்களுக்கு அடுத்தடுத்து விழும் பாலியல் குற்றச்சாட்டால். மலையாள திரையுலகமும், ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மாதம் 23 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    கடந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர், கன்னூர் ஸ்குவாட், நண்பகல் நேரத்து மயக்கம் , பிரம்மயுகம் என அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதைத்தொடர்ந்து மம்மூட்டி டர்போ என்ற படத்தில் நடித்தார். கடந்த மாதம் 23 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.

    மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் அமைந்தது.

    இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான சோனி லைவ் வாங்கியுள்ளது. இப்படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் மலையாளத்தில் பிரித்விராஜ் , பேசில் ஜோசஃப் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான குருவாயூரம்பல நடையில் திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

    நிவின் பாலி நடித்து வெளியான மலையாளி ஃப்ரம் இந்தியா திரைப்படமும் ஜுலை 5 ஆம் தேதி சோனி லைவில் வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து பிரபல நட்சத்திரங்கள் நடித்த மலையாள திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகப்போவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
    • அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”

    படங்கள் திரைக்கு வரும் முன்பே அதற்கு அங்கீகாரம் கிடைப்பது என்பது மிக பெரிய விஷயம் மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் அதில் பணியாற்றி அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் மாபெரும் வெற்றி ஆகும். அப்படியொரு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் "ஏழு கடல் ஏழு மலை",

    கடந்த 2024 ஜனவரியில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.


    இந்நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் மற்றுமொரு விழாவான ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

    ராம் இயக்கி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ளனர். இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ நேற்று வெளியாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

    மலையாள சினிமாவின் முன்னணி பிரபலங்களுள் நிவின் பாலியும் ஒருவர். சமீபத்தில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் படத்தில் நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவரின் கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நிவின் பாலி தற்பொழுது மலையாளி ஃப்ரம் இந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். இதற்கு முன் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 'ஜன கன மன' திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    நிவின் பாலியுடன் அனஸ்வர ராஜன், தியான் ஸ்ரீனிவாசன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நிவின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ நேற்று வெளியாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

    படத்தின் டீசரை குறித்து படத்தின் இயக்குனரான டிஜோ ஜோஸ் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'இப்படம் அனைத்து மலையாளிகளுக்கும் பிடிக்கும், ஒரு மலையாளியின் அன்றாட வாழ்வியலை சித்தரிக்கும் விதமாகதான் இப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆல்பரம்பில் கோபி, அவனுடைய வாழ்க்கை, அவன் வாழ்க்கையை மாற்றக் கூடிய சம்பவங்களை பற்றி பேசும் படமாக இது இருக்கும். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் இத்திரைப்படம் வேலை இல்லாமல் திண்டாடும் இரண்டு கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், அனைத்து மொழி மக்களும் படத்தை காண வர வேண்டும்." என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
    • இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். நிவின் பாலியுடன் அனஸ்வர ராஜன், ஸ்ரீஇனிவாசன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்

    2012 ஆம் ஆண்டு வெளியான தத்தத்தின் மறையத்து படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் நிவின் பாலி. அதைத் தொடர்ந்து நேரம், ஓம் ஷாந்தி ஒசன்னா, பெங்களூர் டேஸ் படங்களில் நடித்து மக்கள் அமந்தை வென்றார்.

    2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்தார், இப்படம் தமிழக ரசிகர்களின் அன்பை நிவின் பாலிக்கு பெற்றுக் கொடுத்தது. சமீப காலத்தில் அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க்வில்லை.

    ஏப்ரல் 11 ஆம் தேதி வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவரின் கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேறபை பெற்றது. அதை தொடர்ந்து நிவின் பாலி தற்பொழுது மலையாளி ஃப்ரம் இந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார்.

    ஆல்பரம்பில் கோபி என்பவன் வேலையில்லாமல் இருக்கிறான் அவன் எதிர்பாராத விதாமான் ஒரு பயணத்தில் ஈடுபடுகிறான். அதனால் அவனுடைய வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். நிவின் பாலியுடன் அனஸ்வர ராஜன், ஸ்ரீனிவாசன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நிவின் பாலியின் நிவின் பாலியின் ஜூனியர் பிகசர்ஸ் தயாரித்துள்ளது. படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்
    • தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் ’லவ் ஆக்‌ஷன் டிராமா’.

    2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

    2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடிக்கவிருக்கிறார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்குகிறார்கள்.

     

    பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நயன்தாரா இப்படத்தில் நடிக்க போகிறார் என்பதை படக்குழுவினர் ஒரு வீடியோவின் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதில் பேப்பரில் இங்க் ஊற்றி நயந்தாராவின் புகைப்படம் தெரிகிறது. இந்த வீடியோவை நிவின் பாலி அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
    • படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.

    இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

    மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். விஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், காதலர் தினத்தை ஒட்டி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிளான "மறுபடி நீ" பாடலை படக்குழு வெளியிட்டது.

    • பாதே சினிமாஸ் திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
    • இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது.

    சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படம் உலகளாவிய சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

     


    கவிதை போல அழகாகவும், பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பும் கொண்ட இந்த திரைப்படம் ஒரு தலைசிறந்த படைப்பு என்றும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது என்று பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாளத்தில் பிரபல இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன்.
    • இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இனி எதையும் பதிவிடப்போவதில்லை. என் அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் எனது உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும் என நினைக்கிறேன். அதனால் அப்படியே இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


    ×