என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிஷ் ஏடி"

    • பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி.
    • கிரிஷ் ஏ.டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.

    பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இத்திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரேமலு 2 திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிரிஷ் ஏ.டி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். படத்தின் தலைப்பை பத்லஹம் குடும்ப யுனிட் என வைத்துள்ளனர்.

     

    இப்படத்தை ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இது ஒரு காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் எழுத்தாளர் கிரிஷ் ஏ.டி மற்றும் கிரண் ஜோசி. ஒளிப்பதிவு: அஜ்மல் சஜு, இசை: விஷ்ணு விஜய், படத்தொகுப்பு: ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் மேற்கொள்கின்றனர்.

    செப்டம்பர் மாதம் தயாரிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளனர்.

    • பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.
    • இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்தார்.

    இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமலு. மமிதா பைஜூ, நஸ்லேன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்து இருந்தார்.

    காதல் கலந்த காமெடி கதையம்சம் கொண்டிருந்த பிரேமலு திரைப்படம் மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. பிரேமலு படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்தது.

     


    இந்த நிலையில், பெரும் வரவேற்பை பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. கிரிஷ்ஏ.டி. இயக்கும் இந்த படத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் தயாரிக்கின்றனர்.

    கிரிஷ் ஏ.டி. மற்றும் கிரன் ஜோசி இணைந்து எழுதி இருக்கும் பிரேமலு 2 திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×