என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Movie title"

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது மகனுக்கு திரைத்துறையில் வழிவிட்டுள்ளார்.

    நடிகர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார். தான் இயக்கும் முதல் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

    இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    ஜேசன் சஞ்சய் இயக்கும் தனது முதல் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் தனது முதல் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

    அதன்படி, ஜேசன் சஞ்சயின் படத்திற்கு "சிக்மா" என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.



    • வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
    • ஹாரர்- காமெடி எண்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ளது.

    பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் "பென்ஸ்" திரைப்படம் உருவாகி வருகிறது.

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, நிவின் பாலியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஹாரர்- காமெடி எண்டெர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு "சர்வம் மயா" என பெயரிடப்பட்டுள்ளது.

     

    • டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    • திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.

    படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.

    படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரெடியாகியுள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் தலைப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வரும் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

     

    • சொட்ட சொட்ட நினையுது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
    • மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    ஆல்டர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது".

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

    திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா, மா.க.ப ஆனந்த், KPY புகழ், தீனா, பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி.வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளனர்.

    இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க சிரிக்க வைக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

    மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

    இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார்.
    • பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.

    2018-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள், மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.

    இதையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார். 

    நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    அதன்படி, மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு வரும் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×