என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிஷா கிருஷ்ணன்"

    • டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    • திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.

    படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.

    படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரெடியாகியுள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் தலைப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வரும் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

     

    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலை சின்மயி பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இப்பாடல் திரைப்படத்தில் இல்லாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

    • பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
    • . திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலை சின்மயி பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இப்பாடல் திரைப்படத்தில் இல்லாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

    தமிழ் சினிமாவில் 16 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா, திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் முதல் படத்தில் பார்த்ததை போலவே அதே கட்டுடலுடன் அழகான தோற்றத்திலேயே இருக்கிறார்.

    தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டி நடக்கிறது. சமூகம், பேய், திரில்லர், வழக்கமான கதாநாயகி என்று எல்லாம் கலந்து நடிக்கிறார் நயன்தாரா.

    ஆனால் திரிஷாவோ இந்த போட்டியில் சற்று பின் தங்கி உள்ளார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நாயகி, மோகினி ஆகிய 2 பேய் படங்களுமே எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர் இனி பேய் படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.



    கதைத் தேர்விலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் திரிஷா தன் வேலைகளை எப்படி அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கிறார் என்பதை அனிமே‌ஷன் கார்ட்டூன் வடிவில் ஒரு வீடியோவாக உருவாக்கி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
    தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வரும் திரிஷா, அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார். #Trisha
    திரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படம் வெளியானது.

    ‘த டர்டி பிக்சர்’  படம் வசூல் சாதனை நிகழ்த்திய பிறகே வாழ்க்கை வரலாறு கதைகள் பக்கம் இயக்குனர்கள் பார்வை திரும்பியது. இந்த படத்தில் சில்க் சுமிதாவாக நடித்து இருந்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. 

    மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது.

    கவர்ச்சி நடிகை ‌ஷகிலா வாழ்க்கையும் படமாகிறது. ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையும் படமாகிறது. என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவும் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டியும் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்தது. இப்போது கபில்தேவ் வாழ்க்கையையும் படமாக்குகின்றனர். 



    மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைந்தபோது தனியாக சென்று அவரது உடலுக்கு திரிஷா அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார். 

    ஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது டுவிட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார். இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
    ×