தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் ரிலீஸ்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் ரிலீஸ்
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் இப்பாடலை சின்மயி பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இப்பாடல் திரைப்படத்தில் இல்லாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com