என் மலர்
நீங்கள் தேடியது "Trisha Krishnan"
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷாவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக திரிஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #TrishaKrishnan
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா. 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் திரிஷா பேட்ட படம் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
இன்று அதிகாலை திரிஷாவின் ட்விட்டர் கணக்கை மர்ம கும்பல் கைப்பற்றியதாக தகவல் பரவியது. திரிஷா இதுபற்றி தனது நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.
Think my account is hacked guys. .Pls dont respond to any messages from me from my inbox .
— Trish Krish (@trishtrashers) October 20, 2018
திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்ட போது, ‘ஏதோ ஒரு மர்ம கும்பல் திரிஷாவின் ட்விட்டர் கணக்கில் ஊடுருவி தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் அவரது கணக்கில் இருந்து தவறான வீடியோக்களையும், செய்திகளையும் அனுப்பியதை கண்டுபிடித்தோம்.
உடனடியாக ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டோம். எனவே அந்த அறிவிப்பை திரிஷா வெளியிட்டார். அவர் தற்போது பேட்ட படப்பிடிப்புக்காக வாரணாசியில் இருக்கிறார்’ என்றார்.
திரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஏற்கனவே ஒரு முறை இதேபோல் கைப்பற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்த சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிந்து திரிஷாவை சிக்கலில் சிக்க வைத்தனர்.
இதற்காக திரிஷா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். #TrishaKrishnan
தமிழ் சினிமாவில் 16 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா, திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் முதல் படத்தில் பார்த்ததை போலவே அதே கட்டுடலுடன் அழகான தோற்றத்திலேயே இருக்கிறார்.
தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் போட்டி நடக்கிறது. சமூகம், பேய், திரில்லர், வழக்கமான கதாநாயகி என்று எல்லாம் கலந்து நடிக்கிறார் நயன்தாரா.
ஆனால் திரிஷாவோ இந்த போட்டியில் சற்று பின் தங்கி உள்ளார். திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான நாயகி, மோகினி ஆகிய 2 பேய் படங்களுமே எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர் இனி பேய் படங்களே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்.

கதைத் தேர்விலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் திரிஷா தன் வேலைகளை எப்படி அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கிறார் என்பதை அனிமேஷன் கார்ட்டூன் வடிவில் ஒரு வீடியோவாக உருவாக்கி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வரும் திரிஷா, அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார். #Trisha
திரையுலகில் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படம் வெளியானது.
‘த டர்டி பிக்சர்’ படம் வசூல் சாதனை நிகழ்த்திய பிறகே வாழ்க்கை வரலாறு கதைகள் பக்கம் இயக்குனர்கள் பார்வை திரும்பியது. இந்த படத்தில் சில்க் சுமிதாவாக நடித்து இருந்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநதி என்ற பெயர்களில் வெளியான படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்தி நடிகர் சஞ்சைய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது.
கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையும் படமாகிறது. ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையும் படமாகிறது. என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவும் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டியும் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படமாக வந்தது. இப்போது கபில்தேவ் வாழ்க்கையையும் படமாக்குகின்றனர்.

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷா விருப்பம் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைந்தபோது தனியாக சென்று அவரது உடலுக்கு திரிஷா அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.
ஜெயலலிதா கையால் விருது வாங்கிய படத்தை தனது டுவிட்டர் முகப்பு படமாகவும் வைத்து இருக்கிறார். இதுகுறித்து திரிஷா கூறும்போது, ‘‘சிறுவயதில் இருந்தே எனக்கு ஜெயலலிதாவை பிடிக்கும். ஜெயலலிதா வாழ்க்கையை சினிமா படமாக எடுத்தால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தன்னுடைய ட்விட்டரில் செய்த பதிவால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Trisha #TrishaKrishnan
தமிழ் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருந்து வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படப்பிடிப்பு இல்லாததால் நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றார் திரிஷா. அங்கு உயரமான கட்டிடத்தில் நின்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது ‘A table for two ❤️❤️’ என்று பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், திரிஷா காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் யார் அது? என்று கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.
A table for two ❤️❤️
— Trish Krish (@trishtrashers) July 5, 2018
திரிஷா இதற்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து, திருமணம் வரை சென்று நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை திரிஷா டொராண்டோவில் 1168 அடி உயரத்தில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் நின்று வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. #Trisha
நடிகை திரிஷா தற்போது 96, சதுரங்க வேட்டை 2, மோகினி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் திரிஷா பல வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று விடுவார்.
தற்போது நியூயார்க், டொராண்டோ ஊர்களுக்கு சென்றுள்ளார். அங்கு, 1168 அடி உயரத்தில் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். உயரமான இடத்தில் நின்றுக் கொண்டு அங்குள்ள பிரபல ரோஜர் மைதானத்தில் நடந்த பேஸ்பால் போட்டியை 1168 அடி உயரத்தில் தொங்கியப்படி பார்க்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் நியூயார்க்கில் சுதந்திர தினம் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்திலும் திரிஷா பங்கேற்றுள்ளார்.
சினிமாவுலகில் 15 வருடங்களை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தனிமையை அதிகமாக விரும்புவதாக கூறியிருக்கிறார். #Trisha #TrishaKrishnan
திரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அரை டஜன் படங்கள் கைவசம் வைத்து ‘பிசி’யாக நடித்து வருகிறார். மூன்று படங்கள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதில் மோகினி என்ற பேய் படமும் அடக்கம். இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
பழகும் நண்பர்கள், மன அழுத்தம் தீர்க்கும் வழிமுறைகள் போன்றவை குறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
“வாழ்க்கையில் தினமும் நிறைய பேரை சந்திக்கிறோம். என் எதிரில் வரும் பலர் கையை தூக்கி ‘ஹாய்’ சொல்லி விட்டு செல்கிறார்கள். அவர்களில் சிலருடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதில் கொஞ்சம் பேர் நண்பர்களாக மாறி விடுவார்கள். எப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து விட முடியாது.
அதனால் தினமும் ஒரு தடவையாவது நமக்கு நாமே ‘ஹலோ’ சொல்லிக் கொள்ள வேண்டும். நமக்கு நாம்தான் நண்பன். ஒவ்வொருவரும் தங்களை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையைத்தான் விரும்புவேன். தனக்குத்தானே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் வரும்போது தனிமையில் இருந்து எதற்காக பிரச்சினை வந்தது என்று எனக்குள்ளேயே கேட்டு என்னை பரிசோதனை செய்து கொள்வேன். நல்ல குடும்பம், நண்பர்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு நானேதான் துணை.”
இவ்வாறு திரிஷா கூறினார்.
நடிகை திரிஷா போலி கணக்கு காட்டியதாக வருமானத்துறை விதித்த அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. #Trisha #Trishkrishnan
நடிகை திரிஷா கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார். ஆனால் திரிஷா காண்பித்த வருமான கணக்கை வருமான வரித் துறை ஏற்க மறுத்துவிட்டது. அவர் கூடுதலாக ரூ.3.52 கோடி வருமானத்தை ஈட்டியதாக வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது. தவறான கணக்கு காண்பித்து ஏமாற்றியதாக திரிஷாவுக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை உத்தர விட்டது.
இதனை எதிர்த்து நடிகை திரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த விசாரணையில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. திரிஷா 3.52 கோடி ரூபாய் வருமானத்துக்கு கணக்கு காட்டி இருப்பதாகவும் உத்தரவில் குறிப்பிடத்தக்கது.