என் மலர்
நீங்கள் தேடியது "Twitter"
- 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.
- டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வாஷிங்டன்:
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதமாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த 9-ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.
போலி கணக்குகள் தொடர்பாக கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு டெல்லவிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்குமாறு எலான் மஸ்க் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
- ஒப்பந்தத்தின்படி செயல்படாததால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தது.
- அதன்படி அமெரிக்காவின் டெலவர் கோர்ட்டில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
வாஷிங்டன்:
உலகின் பெறும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.3.4 லட்சம் கோடி) எலான் மஸ்க்-டுவிட்டர் நிர்வாகம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்ளிட்ட சில விவரங்களை டுவிட்டரிடம் எலான் மஸ்க் தரும்படி கேட்டார். ஆனால் அந்த விவரங்களை தர மறுத்ததால் டுவிட்டர் நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக கடந்த 9-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார்.
ஒப்பந்தத்தின்படி செயல்படாததால் எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் டெலவர் கோர்ட்டில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், ஒப்பந்தத்தில் தெரிவித்த தொகைக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்க்குக்கு உத்தரவிடுமாறும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளது.
மேலும் டுவிட்டர் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கான கடமைகளை மதிக்க எலான் மஸ்க் மறுத்து உள்ளார். அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இனி அவரது தனிப்பட்ட நலன்களுக்கு சேவை செய்யாது.
டுவிட்டர் நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகளை சீர்குலைத்து பங்குதாரர் மதிப்பை அழித்து விட்டு எலான் மஸ்க் விலகி செல்கிறார் என்று டுவிட்டர் நிர்வாகம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
- போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.
- எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது.
ஆனால் டுவிட்டரில் 20 - 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதன் கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால், 5 சதவீதத்திற்கும் குறைவான போலி கணக்குகளே உள்ளதாக டுவிட்டர் நிறுவனம தெரிவித்து வந்தது.
இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார்.
தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட்டர் நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று மஸ்க் புகார் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவு செய்ய எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது.
- விளம்பரதாரர்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பணத்தை எந்த வழியில் அதிகமாக செலவிடுகிறார்கள் என்பதை கண்டறிந்து போலி கணக்குகளை தொடங்கி அவர்களை ஏமாற்றுகிறார்கள்.
- இதன்மூலம் பொதுமக்கள் பலர் பண இழப்புக்கு ஆளாகிறார்கள். டுவிட்டர் மூலமும் இந்த போலி கணக்குகள் தொடங்கப்பட்டு தகவல்கள் பரப்பப்படுகின்றன.
சான்பிரான்சிஸ்கோ:
சமூக ஊடகங்களில் சமீப காலமாக போலி கணக்குகளை தொடங்கி மோசடி செய்வது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போலி கணக்குகள் பெரும்பாலும் மோசடி செய்வதற்கும், தவறான தகவல்களை பரப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
விளம்பரதாரர்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பணத்தை எந்த வழியில் அதிகமாக செலவிடுகிறார்கள் என்பதை கண்டறிந்து போலி கணக்குகளை தொடங்கி அவர்களை ஏமாற்றுகிறார்கள்.
இதன்மூலம் பொதுமக்கள் பலர் பண இழப்புக்கு ஆளாகிறார்கள். டுவிட்டர் மூலமும் இந்த போலி கணக்குகள் தொடங்கப்பட்டு தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன் வந்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டரை தினமும் பயன்படுத்துபவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தானியங்கி போலி கணக்குகள் வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டாவிட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கூறி உள்ளார்.
டுவிட்டர் இந்த போலி கணக்குகளின் எண்ணிக்கையை மிகவும் குறைத்துக் காட்டியுள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை கண்டுபிடிப்பதற்கான மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் டுவிட்டர் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது தினமும் 10 லட்சம் போலி கணக்குகளை நீக்குவதாக மாநாட்டில் பேசிய டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
- ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை ட்விட்டர் நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். அந்நிறுவனம் தனது பயனர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது புது அப்டேட்டாக, ட்விட்டர் வாயிலாக அதன் பயனர்கள், நேரடியாக ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை, அந்நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ட்விட்டர் மூலம் இந்த ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை அந்நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் அனைத்து முன்னணி பிராண்ட்களின் பொருட்களையும், இனி ட்விட்டர் வாயிலாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட அளவிலான பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
- நோட்டிபிகேஷன் பேனலின் மூலம் ஒரு டுவிட்டை லைக் அல்லது டிஸ்லைக் செய்வதற்கான ஆப்சன்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
டுவிட்டர், மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக இருப்பதனால், அது தனது பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் டுவிட்டர் தளத்தில் டிஸ்லைக் மற்றும் எடிட் பட்டன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான டெஸ்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குறிப்பிட்ட அளவிலான பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் லைக் அல்லது டிஸ்லைக் அம்சமும் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி நோட்டிபிகேஷன் பேனலின் மூலம் ஒரு டுவிட்டை லைக் அல்லது டிஸ்லைக் செய்வதற்கான ஆப்சன்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, தவறான வார்த்தைகளை டுவிட்டில் பயன்படுத்தி இருந்தாலோ, அதனை பதிவிடும் முன்னரே டுவிட்டரில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. அதில் எடிட் செய்ய போகிறீர்களா என்கிற ஆப்சனும் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த அம்சங்கள் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

It's easy to express yourself by Retweeting with a comment. What if you could take it a step further and include media? Starting today, you can! Retweet with photos, a GIF, or a video to really make your reaction pop. Available on iOS, Android, and https://t.co/AzMLIfU3jB. pic.twitter.com/Oir5Hpkb2F
— Twitter Support (@TwitterSupport) May 6, 2019
