search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ட்விட்டர் சிஇஒ ஆனார் எலான் மஸ்க் - வெளியானது அதிரடி அறிவிப்பு
    X

    ட்விட்டர் சிஇஒ ஆனார் எலான் மஸ்க் - வெளியானது அதிரடி அறிவிப்பு

    • டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கி இருக்கிறார்.
    • நிறுவனத்தை கையகப்படுத்தியதும் ட்விட்டர் சிஇஒ உள்பட முக்கிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 700 கோடி கொடுத்து வாங்கினார்.

    ஸ்பேஸ்-எக்ஸ், நியூராலின்க் ஸ்டார்ட்-அப், போரிங் கம்பெனி போன்ற நிறுவனங்களை எலான் மஸ்க் நிர்வகித்து வருகிறார். ட்விட்டரை முழுமையாக தன்வசமாக்கிய எலான் மஸ்க், ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலரை பணி நீக்கம் செய்தததாக கூறப்படுகிறது.

    இத்துடன் ட்விட்டர் வெரிபிகேஷன் சேவையை வைத்திருக்க கட்டணம் செலுத்தும் முறையையும் எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பாட்களை முறியடிக்க முடியும் என்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவீனங்களுக்கும் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்து இருக்க முடியாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

    செக்யுரிட்டி ஃபைலிங்கில் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்று இருப்பதை எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். மற்றொரு ஃபைலிங்கில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒற்றை இயக்குனராக தான் பதவி வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் குழு நீக்கப்பட்ட நடவடிக்கை தற்காலிகமான ஒன்று தான் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×