search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    வெரிபிகேஷனுக்கு கட்டணம் வசூலிக்க ட்விட்டர் திட்டம்?
    X

    வெரிபிகேஷனுக்கு கட்டணம் வசூலிக்க ட்விட்டர் திட்டம்?

    • ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கும் முழு நடவடிக்கைகள் கடந்த வாரம் நிறைவு பெற்றன.
    • ட்விட்டர் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க் கையில் சின்க் ஒன்றை எடுத்து செல்லும் வீடியோ வைரலானது.

    ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர பணியை சரியான காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க தவரும் ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன் படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதந்திர கட்டணம் 19.99 டாலர்கள் என மாறும் என கூறப்படுகிறது.

    வெரிபைடு பயனர்கள் 90 நாட்கள் வரை புளூ டிக் வைத்திருக்க முடியும். அதற்குள் சந்தா செலுத்தாத பட்சத்தில் புளூ டிக் நீக்கப்பட்டு விடும். இதற்கான வசதியை ட்விட்டரில் செயல்படுத்த நவம்பர் 7 ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×