விரைவில் வெளியாகும் சூர்யா 45 பட டைட்டில் டீசர்

ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் வெளியாகும் சூர்யா 45 பட டைட்டில் டீசர்
Published on

ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.

படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசர் ரெடியாகியுல்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்திற்கு கருப்பு என பெயர் வைத்துள்ளனர் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com