என் மலர்
நீங்கள் தேடியது "படத்தலைப்பு"
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.
பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.
இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
இந்நிலையில், BRO CODE என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டிவிசன் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க இண்டோ-ஸ்பிரிட் பிவ்ரேஜஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்ததுடன், விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது மகனுக்கு திரைத்துறையில் வழிவிட்டுள்ளார்.
நடிகர் விஜயின் மகன், ஜேசன் சஞ்சய் படம் இயக்குகிறார். தான் இயக்கும் முதல் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் தனது முதல் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் தனது முதல் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜேசன் சஞ்சயின் படத்திற்கு "சிக்மா" என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
- திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.
படத்தின் டைட்டில் மற்றும் டீசர் ரெடியாகியுள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் தலைப்பு விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா 45வது படத்தின் டைட்டில் டீசர் வரும் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

- நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
- இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டில் டீசரை படக்குழு இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிட்டு படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார்.
- பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.
2018-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள், மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.
இதையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார்.

நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு வரும் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






