மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு

மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார்.பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.
மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் படத்தின் தலைப்பு வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

2018-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள், மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.

இதையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்குகிறார். 

நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு வரும் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com