சாய் அபயங்கர் இசையில் செம்ம குத்து பாடலுக்கு தயாராகும் சூர்யா 45

சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
சாய் அபயங்கர் இசையில் செம்ம குத்து பாடலுக்கு தயாராகும் சூர்யா 45
Published on

சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அடுத்தாக படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் இல் பெரிய திருவிழா செட் அமைத்து ஒரு பாடலை படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவிழா பின்னணியில் சூர்யா மற்றும் திரிஷா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்பாடலில் 500 நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும் மற்றும் பல கோடி செலவளித்து செட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் ஒரு ஃபேண்டசி கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கின்றனர்.

படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com