என் மலர்

  நீங்கள் தேடியது "Koovathur"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவதால் தன் உயிர் போகும் என்றால் போகட்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார். #Karunas #Koovathur
  சென்னை:

  முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடுமையாக கண்டித்தவர்களில் நானும் ஒருவன். போராடிய மக்களுக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிராகவும் பேசியதற்காகவும் பழிவாங்கப்படுகிறேன். நான் ஒரு சமுதாயவாதி.

  நான் கூட்டணி கட்சி தலைவர், தோழமை கட்சி என்ற மரியாதை கூட கொடுக்காமல் கண்ணியமற்று பேசி வருகின்றனர்.

  நான் லொடுக்கு பாண்டி அல்ல. லொடுக்கு பாண்டியன், பெயரை சரியாக உச்சரியுங்கள். முக்குலத்து சமுதாய மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். அதை வரும் தேர்தலில் முக்குலத்து மக்கள் காண்பிப்பார்கள்.

  கோப்புப்படம்

  கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன், அப்படி கூறுவதால் என் உயிர் போகும் என்றால் போகட்டும், சமுதாயத்திற்காக என் உயிர் போகட்டும். இந்திய அளவில் மோடி அரசு டெபாசிட் இழக்கும்.

  நான் முக்குலத்தோர் புலிப்படை என போஸ்டர் ஒட்டினால் வழக்குப்பதிவு செய்கிறீர்கள், நேற்று அண்ணா சாலையில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்?

  எடப்பாடி அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்து வருகிறது. அமைச்சர்கள் நிலையறிந்து பேசவேண்டும், நானாவது தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் சீட் வாங்கி வென்றவன்.

  அமைச்சர்கள் இருந்த நிலையை மறக்க வேண்டாம்.

  எத்தனையோ சிலைகள் மெரினாவில் இருக்கிறது, மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப முக்கிய சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முன்னதாக கருணாசை தினகரன் ஆதரவாளரும், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். #Karunas #Koovathur
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக ஆட்சி தொடர என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், தேவைப்பட்டால் கூவத்தூர் ரகசியத்தை வெளியிட தயாராக இருப்பதாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். #Karunas #Koovathur
  சென்னை:

  தி.மு.க. சார்பில் அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

  இப்போதைய அரசு ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது. மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் தங்கள் மீது மட்டும் அக்கறையுடன் செயல்படுகிறார்கள். நான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டேன். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு ஜெயித்தேன்.

  என்றாலும், இன்று வரை நடுநிலையுடன்தான் செயல்படுகிறேன். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். தூத்துக்குடியில் அரசு நடந்து கொண்ட விதம் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்து இருக்கிறது.

  தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் நடத்திய மக்கள் மீது குறிவைத்து சுட போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது பற்றி சட்டசபையில் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. உதவி வட்டாட்சியர் உத்தரவுப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்கிறார்கள்.

  முதல்-அமைச்சர் இது பற்றி பேசும் போது துப்பாக்கி சூடு என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னுடைய பாதுகாப்புக்காக நியமித்த அதிகாரியை நீக்கி இருக்கிறார்கள். சட்டசபையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நான் பேசியதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

  நான் எப்போதும் நியாயத்தின் பக்கம்தான் இருப்பேன். தி.மு.க. தற்போது மக்களுக்காக குரல் கொடுக்கிறது. நானும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும்.

  அடுத்து ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். இதில், மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். மக்கள் நலனை மட்டும் சிந்திக்கும் அரசாக அது இருக்க வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். சாதாரண சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு கூட பணம் கேட்கிறார்கள்.

  நான் எனது தொகுதி மக்களுக்காக 182 மனுக்களை அரசிடம் கொடுத்து இருக்கிறேன். அதில் 2 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. எனவே அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி வரவேண்டும். எனக்கு சீட் வேண்டும் என்பதற்காக இப்படி பேசவில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதை சொல்கிறேன்.


  மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் எம்.எல்.ஏ. ஆனேன். ஆனால் அவமானங்களை சந்தித்து விட்டேன். இந்த ஆட்சி தொடர என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தேவைப்பட்டால் கூவத்தூர் சம்பவம் பற்றிய ரகசியத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறேன்.

  இன்றைய அரசு பணத்துக்காக நடைபெறும் அரசாக இருக்கிறது. வியாபாரம் போல நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் இந்த அரசை விரும்பவில்லை. எனவே, மக்கள் விரும்பும் அரசு, ஜனநாயகத்தை மதிக்கும் அரசு வர வேண்டும். அதற்கு நானும் துணை நிற்கிறேன்.

  இவ்வாறு கருணாஸ் பேசினார். #Karunas #Koovathur
  ×