search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLA Karunas"

    முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறிவந்த எம்எல்ஏ கருணாஸ், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். #MLAKarunas #EdappadiPalaniswami
    சென்னை:

    சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் இன்று சந்தித்தார். அப்போது, சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமியிடம் கருணாஸ் மனு அளித்தார்.



    இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:

    தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MLAKarunas #EdappadiPalaniswami

    புலித்தேவர் நினைவிடத்தில் மோதல் தொடர்பாக கருணாஸை கைது செய்வதற்கு இடைக்கால தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிபதி 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #KarunasMLA
    மதுரை:

    நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் கடந்த ஆண்டு புலித்தேவர் நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் மரியாதை செலுத்த சென்றபோது மோதல் வெடித்தது.

    இது தொடர்பாக புளியங்குடி போலீசார் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில் கருணாசை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் கருணாஸ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    விசாரனை முடியும் வரை கருணாஸை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு அளிக்கலாமே எனவும் என கருணாசின் வக்கீல் வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, மூன்று நாட்களுக்கு கருணாசை கைது செய்ய மாட்டார்கள் எனக்கூறி முன் ஜாமீன் மனு மீதான விசாரனையை வருகிற திங்கட்கிழமைக்கு (8-ந் தேதி) ஒத்திவைத்தார். #KarunasMLA
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படவும் இல்லை பேசவும் இல்லை என்று கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
    விருத்தாசலம்:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முதல்-அமைச்சருக்கு எதிராக பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சபாநாயகரிடமிருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. நோட்டீஸ் வந்தபிறகு அதுகுறித்து நான் பதில் சொல்கிறேன். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன்.

    சின்னம்மா சசிகலா தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்.

    இதுதொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் சம்பந்தமாகவும் கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் ஒரு முடிவு வரட்டும்.

    நான் முதல்- அமைச்சருக்கு எதிராக செயல்படவில்லை. கூட்டத்தில் முதல்- அமைச்சருக்கும் எதிராகவும் நான் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதுதொடர்பாக பிரபு எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இதுவரை எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதை சட்டப்படி எதிர் கொள்வேன். நான் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன்.

    இந்தநிலையில் நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறேன் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

    இந்த ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் எண்ணம் எப்படி பட்டது என்று அனைவருக்கும் தெரிந்ததே.

    இவ்வாறு அவர் கூறினார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவதால் தன் உயிர் போகும் என்றால் போகட்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார். #Karunas #Koovathur
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடுமையாக கண்டித்தவர்களில் நானும் ஒருவன். போராடிய மக்களுக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிராகவும் பேசியதற்காகவும் பழிவாங்கப்படுகிறேன். நான் ஒரு சமுதாயவாதி.

    நான் கூட்டணி கட்சி தலைவர், தோழமை கட்சி என்ற மரியாதை கூட கொடுக்காமல் கண்ணியமற்று பேசி வருகின்றனர்.

    நான் லொடுக்கு பாண்டி அல்ல. லொடுக்கு பாண்டியன், பெயரை சரியாக உச்சரியுங்கள். முக்குலத்து சமுதாய மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். அதை வரும் தேர்தலில் முக்குலத்து மக்கள் காண்பிப்பார்கள்.

    கோப்புப்படம்

    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன், அப்படி கூறுவதால் என் உயிர் போகும் என்றால் போகட்டும், சமுதாயத்திற்காக என் உயிர் போகட்டும். இந்திய அளவில் மோடி அரசு டெபாசிட் இழக்கும்.

    நான் முக்குலத்தோர் புலிப்படை என போஸ்டர் ஒட்டினால் வழக்குப்பதிவு செய்கிறீர்கள், நேற்று அண்ணா சாலையில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்?

    எடப்பாடி அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்து வருகிறது. அமைச்சர்கள் நிலையறிந்து பேசவேண்டும், நானாவது தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் சீட் வாங்கி வென்றவன்.

    அமைச்சர்கள் இருந்த நிலையை மறக்க வேண்டாம்.

    எத்தனையோ சிலைகள் மெரினாவில் இருக்கிறது, மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப முக்கிய சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கருணாசை தினகரன் ஆதரவாளரும், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். #Karunas #Koovathur
    அவதூறாக பேசி கைதாகிய எம்.எல்.ஏ. கருணாஸ் மீது தொடரப்பட்ட கூடுதல் வழக்கு ஒன்றில் அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Karunas
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட மேலும் 2 வழக்குக கருணாஸ் மீது பதியப்பட்டன. அந்த வழக்கு குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையில், கூடுதலாக பதியப்பட்ட வழக்குகளில் ஒன்றான கொலை முயற்சி வழக்கில் கருணாசுக்கு நீதிமன்ற காவல் அளிக்க மறுத்த நீதிமன்றம், ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை தாக்கிய விவகாரத்தில் அக்டோபர் மாதம் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #Karunas
    முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ள கருணாஸ் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். #Karunas
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கு உள்பட 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நாளை அவர் சிறையில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்.எல்.ஏ கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #Karunas
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 23-ம் தேதி காலை அவரை கைது செய்தனர். 

    3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    கருணாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
    தனது ஆதரவாளர்கள் அருந்தும் மதுவுக்கு மட்டும் தினமும் ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கருணாஸ் கூறியிருப்பதால் அவரது பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Karunas
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ், கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    இது தொடர்பான வீடியோ பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் தனது சட்டையை கழற்றி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி எழுப்பிய கருணாஸ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே என்னை பார்த்து பயப்படுகிறார் என்றும் கூறினார்.

    நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் கொலை செய்யவும் தயங்கக்கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வாருங்கள். வழக்கு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். மதுவுக்காக மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவாகிறது என்றும் பேசினார்.

    இதனை தொடர்ந்தே நேற்று முன்தினம் அதிகாலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், அடுத்த சில மணி நேரங்களிலேயே வேலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். பாதுகாப்பு காரணங்களால் அவர் இடமாற்றம் செய்யபட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதன்படி எழும்பூர் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்னர் குறிப்பிட்ட நாளில் கோர்ட்டில் ஆஜராகும் அவரை போலீசார் காவலில் எடுக்க உள்ளனர்.


    கருணாஸ் பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாஸ் தனது பேச்சில் தினமும் மதுவுக்காக ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார். இந்த பணம் எப்படி வருகிறது? எந்த அடிப்படையில் யாருக்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்க உள்ளனர்.

    தி.நகர் துணை கமி‌ஷனராக இருக்கும் அரவிந்தன் பற்றி கருணாஸ் பேசியதும் கடும் விவாதப் பொருளானது. எதற்காக கருணாஸ் அப்படி பேசினார்? அவருடன் அப்படி என்ன பிரச்சனை? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் போலீஸ் காவலில் கருணாசிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் விளக்கம் கேட்கப்படுகிறது.

    கருணாஸ் பேசிய பேச்சுக்கள், அவராகவே பேசியதா? என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படையில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் தாமோதர கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாசை காவலில் எடுக்கும் போது, தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். #Karunas

    முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான எம்.எல்.ஏ கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Karunas
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று காலை அவரை கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி போலீசார் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. 
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #Karunas
    சென்னை:

    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.

    மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர்.

    கைதாகி வேனில் ஏற்றும் முன்பு ஊடகங்களிடம் பேசிய கருணாஸ், ‘ சட்டமன்ற உறுப்பினரான என்னை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி வேண்டும். ஆனால், என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை.

    இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கும் வகையில் பேசிய என் மீது குற்றப்பிரிவு 307 கீழ் ஏன் வழக்கு பதிவு செய்தனர் ? என தெரியவில்லை. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் நோக்கில் ஆளும் ஆதிமுக அரசு செயல்படுகிறது.

    இந்த வழக்கை சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்’ என அவர் தெரிவித்தார். இதன் பின்னர் விசாரணைக்காக கருணாசை போலீசார் அழைத்து சென்றனர். #Karunas
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் விளக்கம் அளித்த கருணாஸ், உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். #Karunas
    சென்னை:

    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். 

    மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

    நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை விமர்சியுங்கள். அன்றைய கூட்டத்தில் பலரை ஒருமையில் பேசியதற்காக எனது மனைவியிடம் அன்றே வருத்தத்தை தெரிவித்தேன். தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்?

    கூவத்தூர் சம்வபம் தொடர்பாக பேசுகிறீர்கள். ஜனாதிபதியை நான் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா?, அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன். 

    முக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். பொய் வழக்கு போடுகின்றனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை. குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கான ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    என அவர் பேசினார். 
    சர்ச்சை பேச்சு தொடர்பாக 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தான் தலைமறைவாக வில்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார். #Karunas
    சென்னை:

    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். 

    மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், தான் தலைமறைவாக இல்லை வீட்டில் தான் இருக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார்.
    ×