என் மலர்
நீங்கள் தேடியது "egmore court"
- எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
- அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.
பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் தலைமறைவானார். ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.
- தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது.
- 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 7-வது நுழைவுவாயில் 5 கிராம் 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடருடன் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சின்னத்திரை துணை நடிகை எஸ்தர் என்கிற மீனா (வயது 28) என்பது தெரிய வந்தது.
தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது. 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். துணை நடிகை மீனாவுக்கு 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
- வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பியும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை என வினோஜ் பி.செல்வம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி, வினோஜ் பி.செல்வம் சமூக வலைளத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் கருத்து பதவிட்டதாக தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இ.எஸ்.ஐ. பணத்தை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
- ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
சென்னை:
பிரபல நடிகை ஜெயபிரதா தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். எம்.பி.யாகவும் இவர் இருந்துள்ளார்.
இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார் ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார்.
அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. பணத்தை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தொழி லாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயப்பிரதா சார்பில் ஆஜரான வக்கீல் தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ. பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக தெரிவித்தார்.
இதற்கு தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் கவுசிக் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் கோர்ட்டு ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
- புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.
சென்னை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.
இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.
மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.
இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மே மாதம் 13-ம் தேதி (இன்று) சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா ஆஜராகவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் கணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்துள்ளார்.
டிடிவி தினகரன் கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பர்க்லேஸ் வங்கி மூலம் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கு 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு (பெரா) பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டது.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தாலும், விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
அத்துடன், டிடிவி தினகரன் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறையின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினர். #TTVDinakaran #FERACase
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியாமல் போனது.

இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவானது,
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலம் சசிகலா விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 4 மாதங்களில் சசிகலா, பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை முடிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி கவர்னர் மாளிகை சார்பில், செயலாளர் ராஜகோபால் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஜாம்பஜார் போலீசார் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (அரசு உயர் பதவியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய மாடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன. வெளி ஆட்கள் யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

நக்கீரன் கோபாலை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தினர். இதற்காக 12.45 மணி அளவில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார்.
நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊடக பிரதிநிதியாக நீதிமன்றத்தில் ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் கைது செய்ய முகாந்திரம் இல்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டால் தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவும் தெரிவித்து இருந்தார்.
மேலும், நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் இருந்ததால் தான் தான் விடுதலை ஆனதாகவும் நக்கீரன் கோபால் குறிப்பிட்டுள்ளார்.#NakkeeranGopal
நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி கட்டுரை வெளியானதால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பணியில் தலையிடுவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நக்கீரன் கோபால் தரப்பில் இருந்து முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நக்கீரன் தரப்பில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வழக்குவிசாரணை சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையால் ஆளுநர் பணியில் என்ன இடையூறு ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும் எனவும், காலதாமதாக நடவடிக்கை எடுப்பதற்கான உள்நோக்கம் என்ன? எனவும் நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஊடக பிரதிநிதியாக ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் என தீர்ப்பு வழங்கப்பட்டால் அது தவறான உதாரணம் ஆகிவிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #NakkheeranGopal
நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸ் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் போட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கருணாசுக்கு எழும்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கருணாஸ் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதற்கு ஐ.பி.எல். வழக்கு தடையாக உள்ளது. ஐ.பி.எல். போட்டியின்போது வன்முறையை தூண்டியதாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் கருணாஸ் மீது 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளில் ஜாமீன் வழங்குவது குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. #Karunas