என் மலர்
நீங்கள் தேடியது "Bail Petition"
- விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
- சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கேட்டு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் பலமுறை மனு தாக்கல் செய்யப்பட்டன.
சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவரம், இன்னர் ரிங் ரோடு ஊழல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இவரது மனுக்கள் மீது இன்று ஒரே நாளில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ளது.
- செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
- கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட்.
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2வது மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விசாரணையின்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே? என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
- இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
- தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு.
பெங்களூரு:
பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேவண்ணாவை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா சார்பில் அவரது வக்கீல் பவன்சாகர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி விசாரணையை இன்று ஒத்திவைத்தார். எனவே இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ஆபாசமான வீடியோக்கள், புடைப்படங்களை பகிர்வது மட்டுமல்ல, அவற்றை வைத்திருப்பதும் குற்றம். தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
எனவே ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தி ருந்தால் கண்டுபிடிப்பது எளிது. எனவே இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புடைப்படங்களை யாராவது வைத்திருந்தால், அவற்றை அழித்து விடுவதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்த தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
- ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேவண்ணாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேவண்ணாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை பெங்களூரு நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ரேவண்ணாவை போலீஸ் அழைத்துச் செல்கிறது.
- விசாரணைக்கு சென்ற காவலர்களை தாக்கியது மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டியது ஆகிய வழக்கில் இருவரும் கைது.
- ஒரு வழக்கில் இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் போலீசார் சம்மன் நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (பிப்ரவரி) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பாதுகாவலர் உள்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கமலுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது.

இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
மேலும் தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார்.
இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடைபெற உள்ள வழக்குகளின் பட்டியலில் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு வழக்கும் இடம் பெற்றுள்ளது.
எனவே அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை மறுநாள் தெரியவரும்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அமுதவள்ளி, ரவிச்சந்திரன், பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா ஆகிய 5 பேரும் கடந்த 6-ந் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #RasipuramNurse #CBCID
குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரிய அவர்கள் 6 பேரின் மனுவை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Gutkhascam

ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு வழங்கியுள்ளார்.
அவருக்கு விரைவில் பரோல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 15 நாட்கள் வரை பரோலில் செல்ல அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #ilavarasi
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தி நக்கீரன் பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து கவர்னர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று அவரை மாஜிஸ்திரேட்டு விடுவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களை கைது செய்யலாம் என்று கருதி, நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி கட்டுரை வெளியானதால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பணியில் தலையிடுவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நக்கீரன் கோபால் தரப்பில் இருந்து முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நக்கீரன் தரப்பில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வழக்குவிசாரணை சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையால் ஆளுநர் பணியில் என்ன இடையூறு ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும் எனவும், காலதாமதாக நடவடிக்கை எடுப்பதற்கான உள்நோக்கம் என்ன? எனவும் நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஊடக பிரதிநிதியாக ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் என தீர்ப்பு வழங்கப்பட்டால் அது தவறான உதாரணம் ஆகிவிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #NakkheeranGopal






