என் மலர்

  செய்திகள்

  பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி ‘பரோல்’ கேட்டு மனு
  X

  பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி ‘பரோல்’ கேட்டு மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி, பரோல் கேட்டு மனு கொடுத்துள்ளார். #ilavarasi
  பெங்களூரு:

  சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா 2 முறை பரோல் மூலம் சென்னை சென்று வந்தார்.  ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில் நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு வழங்கியுள்ளார்.

  அவருக்கு விரைவில் பரோல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 15 நாட்கள் வரை பரோலில் செல்ல அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #ilavarasi
  Next Story
  ×