என் மலர்
நீங்கள் தேடியது "பெங்களூரு சிறை"
- 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும்.
- விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவில், பரப்பன அக்ரஹாரா சிறை உள்ளது. இங்கு 5,500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் சொகுசு வசதி பெற்றதுடன், செல்போனில் பேசியது, நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்த படியே டீ குடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
பரப்பன அக்ரஹாரா சிறையில் கற்பழிப்பு வழக்கு குற்றவாளியான உமேஷ் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 20 கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அவற்றில் 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும். இந்த வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் உமேஷ் ரெட்டி செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சிறைக்குள் செல்போனில் பேசியபடி அங்கும், இங்கும் சுற்றி திரிகிறார்.
அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் டி.வி. இருப்பதும் தெரியவந்துள்ளது. உமேஷ் ரெட்டி 2 விதமான செல்போன்களில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் 2 செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. உமேஷ் ரெட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவின் காதலன் தருணும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் செல்போனில் பேசியபடி சிறையில் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஜூகாத் கமீத் ஷகீலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூகாத் செல்போனில் பேசியபடி சிறைக்குள் சுற்றி வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுபற்றி நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால் அந்த வீடியோவை தான் பார்க்கவில்லை என்றும், அதுபற்றி அதிகாரிகளிடம் தகவல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார். அதே நேரத்தில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்று விட்டார்.
இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த், மேற்கண்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறையை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அப்படி இருந்தும் கைதிகள் எப்படி செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஜாமரால் தங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் சிறையில் உள்ள கைதிகள் செல்போன்களில் பேசுவது எப்படி என்பது தெரியவில்லை? என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார்.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வழக்கப்பட்ட வழக்கை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் நடத்திய விசாரணை அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது தற்போது தெரியவந்து உள்ளது.
ரூபா மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக சசிகலாவின் வக்கீல் அசோகன், கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரூபாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
என் மீது ஒரு வழக்கு மட்டுமல்ல, ஓராயிரம் வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன். வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.
இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். என் கடமையை தொடர்ந்து செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுத்தது தொடர்பாக கர்நாடக உள்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Roopa
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, 2017-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்தபோது சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறினார். மேலும் இதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரூபா, “தான் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து கர்நாடக மாநில போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் எழுந்த புகார் குறித்து விசாரணை குழு அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கவனித்தேன். ஊடகங்களிலும் இதுபற்றி வெளியானதை பார்த்தேன். சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #Sasikala #VIPtreatment
பெங்களூரு:
கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-
போலீஸ் அதிகாரி ரூபா தனது கடமையை செய்யாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளார். அவருக்கு பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும். நாங்களும் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துகிறோம்.
ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் சிறைத்துறை பொறுப்பில் இருந்தபோது 2 மெமோக்களை ரூபாவுக்கு வழங்கினார்.
அந்த மெமோக்களுக்கு பதிலளிக்காத அவர் சசிகலா விவகாரத்தை கையில் எடுத்து அவரது பிரச்சினையை திசைதிருப்பி விட்டார். சிறையில் எந்த வசதியும் இல்லாமல் சசிகலா, அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ரூபா கூறி இருக்கிறார். நான் இதுவரை 1 கோடி பணத்தைகூட நேரில் பார்த்தது இல்லை.

இந்த விவகாரத்தில் என்னையும் தேவையில்லாமல் இழுத்து கர்நாடக ஊழல் தடுப்புபடை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ரூபா மீது நானே மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சசிகலா தரப்பிலும் அவர் மீது வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #sasikal #roopa
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார்.

மேலும் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாள் விசாரணை நடத்திய பிறகு இந்த சந்திப்பு நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யமாட்டோம் என்று தினகரன் அறிவித்து இருந்தார். ஆனால் ஒரு சிலர் அப்பீல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சசிகலாவிடம் தினகரனும், மற்றவர்களும் ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
மேலும் சசிகலா மற்றும் தினகரனை தவிர மற்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கூறி இருந்தனர். ஆனால் இவர்கள் 2 பேரை சேர்த்தால்தான் நாங்களும் அ.தி.மு.க.வில் இணைவோம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது. #TTVDhinakaran #Sasikala

அதன்படி, ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றது. அங்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். இன்றும், நாளையும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #ITRaids #Sasikala
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதேபோல் தமிழக உள்துறைக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு எழுதி உள்ள அந்த கடிதத்தில், சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி பெற்று தரும்படி கூறப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #Sasikala
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20 மாதங்கள் ஆகின்றன.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு இளவரசி முதல் முறையாக சிறை நிர்வாகத்திடம் மனு வழங்கினார்.
அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட சிறை நிர்வாகம், இளவரசிக்கு நிபந்தனையுடன் 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து இளவரசி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் சென்னையில் தங்கியிருந்தார்.
15 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து இளவரசி நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார். #Ilavarasi #BangaloreJail
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலா கன்னடம் கற்று வருகிறார்.
மற்ற கைதிகள் கன்னடத்தில் பேசினால், அதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது அவர் கன்னடத்தில் எழுதவும் பயிற்சி பெற்று உள்ளார்.
பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையம் கைதிகளுக்கு சான்றிதழ் படிப்பு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் பெங்களூரு சிறையில் உள்ள 257 கைதிகள் 2018-19ம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டம் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
சசிகலாவையும் கன்னட சான்றிதழ் படிப்பில் சேர வைக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழக தொலை தூர கல்வி மைய டைரக்டர் மயிலரப்பா கூறியதாவது:-
சசிகலா கன்னடம் கற்க ஆர்வமாக இருப்பதாக ஜெயில் நிர்வாகத்தினர் என்னிடம் தகவல் தெரிவித்தனர். நான் இந்த வாரம் ஜெயிலுக்கு சென்று கைதிகளை பார்க்க இருக்கிறேன். அப்போது கன்னட சான்றிதழ் படிப்பு தொடர்பான விவரங்களை சசிகலாவிடம் தெரிவிப்பேன். சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை வைப்பேன்.
சசிகலா கன்னடத்தில் பேசவும், எழுதவும் பயிற்சி பெற்றிருப்பதாக ஜெயில் அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Sasikala

ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு வழங்கியுள்ளார்.
அவருக்கு விரைவில் பரோல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 15 நாட்கள் வரை பரோலில் செல்ல அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #ilavarasi






