search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appear"

    சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    சென்னை:

    ரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அனுமதி பெறாமல் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 

    மேலும், இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைகோள் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையையும் இந்திய அரசின் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் டாலர்களாக பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
      
    ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.

    அந்நிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மே மாதம் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது.

    பின்னர் பாதுகாப்பு கருதி அவரை பெங்களூரு பர்ப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு கடந்த 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு கடந்த 13-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி எஸ். மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா ஆஜராகவில்லை. 

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்திருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி எஸ்.மலர்மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சசிகலாவிடம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான நகல்களை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் அளித்தார்.

    இன்றைய விசாரணைக்கு பாஸ்கரன் வந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான அரசுதரப்பு வழக்கறிஞர் சசிகலாவிடம் முன்வைக்கும் கேள்விகள் தமிழில் இருக்க வேண்டும் என சசிகலா விரும்புவதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து கேள்விகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் மறுவிசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    மாமல்லபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற கணவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
    மாமல்லபுரம்:

    ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாலதி. இருவரும் சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பணிகள் செய்து வந்தனர்.

    அப்போது அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் மாலதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த நாகராஜ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து கள் விருந்து எனக்கூறி ஜெகனை மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இந்த வழக்கில் மாமல்லபுரம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஆந்திராவுக்கு தப்பி ஓடிய நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜரானார். #nirmaladevi

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    ஓராண்டுக்குப்பின்னர் கடந்த 12-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். இதற்காக அவர் தனியாக காரில் வந்தார். செய்தியாளர்களை பார்த்தவுடன் “பேசக் கூடாது” என்று வாயில் கையை வைத்து சைகை செய்தபடி கோர்ட்டுக்குள் சென்றார்.

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓராண்டாக கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று அவர் தனியாக காரில் வந்தது வித்தியாசமாக இருந்தது. நிர்மலாதேவி விடுதலையானபோதும் இதுவரை அவரை குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. #nirmaladevi 

    ஜாமீனில் விடுதலையான பயங்கரவாதி இஸ்மாயில் இன்று காலை திண்டிவனம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கு ஒன்றில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததையொட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இஸ்மாயிலை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ஷாஜகான் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இஸ்மாயிலையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் அவரை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யும்படி இஸ்மாயில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    மறுஉத்தரவு வரும்வரை திண்டிவனம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு இஸ்மாயில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதனையடுத்து இன்று திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதி இஸ்மாயில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன்பின்பு அவர் அங்கிருந்து வீட்டுக்கு சென்றார்.
    லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா இன்று ஆஜரானார். #RobertVadra
    புதுடெல்லி:

    பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இவ்விவகாரத்தில் ராபர்ட் வதேரா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வரும் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ராபர்ட் வதேரா கலந்து கொள்வார். அவருக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார்.



    இதனையேற்ற நீதிமன்றம் வரும் 16-ம் தேதி வரை ராபர்ட் வதேராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து, ஏற்கனவே கோர்ட்டில் அளித்த வாக்குறுதியின்படி ராபர்ட் வதேரா தனது வழக்கறிஞருடன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். #RobertVadra
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
     
    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.



    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், தம்பிதுரை எம்.பி. ஜனவரி 22ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். #MangatRamSharma #CourtDefamationCase #HighCourt
    சென்னை:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையங்களை வெளிநாடுகளில் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரவை மீறி தொலைதூரக் கல்வி மையங்களை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று 8 பேர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று 7 பேர் ஆஜராகினர். ஆனால், உயர் கல்வித்துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை

    இதையடுத்து, வழக்கை விசாரித்த ஐகோர்ட், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது. 

    இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அப்போது அவர், நேற்று ஆஜராகாததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

    இதையடுத்து, மங்கத்ராம் சர்மாவுக்கு எதிராக பிறப்பித்திருந்த ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட்டை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. #MangatRamSharma #CourtDefamationCase #HighCourt
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று ஆஜரானார். #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 150 பேர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    சசிகலாவும், தனது தரப்பு விளக்கத்தை வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    தற்போது விசாரணை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

    ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியிடம் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்திருந்தது.



    இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை ஏற்று பெருமாள்சாமி இன்று ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகரும் ஆஜரானார்.

    இதேபோல் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் 3-வது நாளாக மீண்டும் ஆஜரானார்.

    இவர்களிடம் ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் அடுத்த கட்டமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #JayaDeathProbe
    பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை கோர்ட்டில் ரஷிய பெண் மீண்டும் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் பகுதியை சேர்ந்த நீலகண்டன் (வயது 35), அவரது தம்பி பாரதி (31), திருவண்ணாமலை செங்கம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (37), பாவாஜி நகரை சேர்ந்த வெங்கடேசன் (30) ஆகியோரை திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ரஷிய பெண் கோர்ட்டில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இதனையடுத்து நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீலகண்டன், பாரதி, மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தேவநாதன் விசாரணை நடத்தினார்.

    மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக ரஷிய பெண் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடமும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் இன்று 2-வது நாளாக மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். #GutkhaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததை கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக செங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த குட்கா குடோனில் சோதனை நடத்தப்பட்டது. இதில் குட்கா விற்பனை தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கின.

    குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஒவ்வொரு மாதமும் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரும் குட்கா ஊழலில் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    தற்போது சிபிஐ விசாரணை வளையத்திற்குள் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பிவி ரமணாவும் வந்துள்ளார். அவரிடம் நேற்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குட்கா ஊழலில் இதுவரையில் ரமணாவின் பெயர் அடிபடாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரமணாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

    இன்றும் இருவரும் சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி முன்னாள் அமைச்சர் ரமணா இன்று 2-வது நாளாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குட்கா ஊழல் தொடர்பாக நேற்று ரமணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக இன்றைய விசாரணை அமைந்திருந்தது.
    குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். #Gutkha #GutkhaScam #Vijayabaskar
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர்மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரது பெயர்களும் குட்கா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    ஆனால் இவர்கள் யார் மீதும் இதுவரையில் நடவடிக்கை பாயவில்லை. அதே நேரத்தில் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குட்கா குடோன் அதிபர் மாதவரராவ் உள்ளிட்ட 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் அதிகாரிகள் ஆவர்.


    குட்கா வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    இதன்படி அவருக்கு ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை ஏற்று சரவணன் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதன் காரணமாக 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சரவணன் இன்று காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் பின்னர் குட்கா விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #Vijayabaskar
    ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள லாலு பிரசாதை வரும் டிசம்பர் 20-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #IRCTCScam #Lalu
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
     
    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐஆர்சிடிசியின் அப்போதைய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் லாலு, மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்தது.



    இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ராப்ரி தேவி, தேஜஸ்வ யாதவ் உள்ளிட்ட அனைவருக்கும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. அத்துடன் நவம்பர் 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் லாலு பிரசாத் யாதவை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    அதன்படி ரெயில்வே ஓட்டல் குத்தகை ஊழல் வழக்கு இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால், லாலு பிரசாத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து வழக்கை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் லாலுவை மருத்துவமனையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #IRCTCScam #Lalu
    ×