search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன்"

    நாளை வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    நாளை வைகாசி மாத சஷ்டி நாளாகும். எனவே இந்தநாளில், முருகக் கடவுளை விரதமிருந்து தரிசியுங்கள். நம் கஷ்டங்களையும் வாழ்வில் ஏற்பட்ட நஷ்டங்களையும் தீர்த்தருள்வான் கந்தகுமாரன்.

    மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.

    சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!

    சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.

    வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

    நாளை முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை விரதம் இருந்து வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!
    திருச்சியை அடுத்த வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3-ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் 3-ம் தேதி தொடங்கும் வைகாசி விசாகப் பெருவிழா 14-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு கொடியேற்றம், நாள்தோறும் இரவு 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா, ஒன்பதாம் திருநாளான ஜூன்.11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்கள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணிய சுவாமியின் ரதாரோகணம் மாலை 4 மணிக்கு மேல் தேரோட்ட விழா, ஜூன் 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    ஜூன் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், ஜூன்.14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறும்.

    ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.
    காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது.
    காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகப்பெருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி தேவேந்திர மயில் வாகனம், கோபுர சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.

    9-ந்தேதி திருத்தேர், 11-ந்தேதி மாவடி சேவை நடக்கிறது. 12-ந்தேதி திருத்தேர், விசாகம், தீர்த்த வாரி நடைபெற உள்ளது.

    வருகிற 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம், சூரன் மயில் வாகன சேவையும், 14-ந்தேதி கேடயம், மங்கள கிரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.
    கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.

    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை:

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை:

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை:

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை:

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை:

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை:

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை:

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
    வாழ்க வையகம்,” வாழ்க வளமுடன்”
    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    பரமத்திவேலூர்:

    வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
     
    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவி லில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், பாலப்பட்டி முருகன், மோகனூர் பாலசுப்ரமணிய சாமி கோவில் மற்றும் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    முத்துமலை முருகன் கோவிலில் மண்டல பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திர கவுண்டன்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையுடன்  முத்துமலை முருகன்  கோவில் கட்டப்பட்டு  கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

    அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகத்தின் இறுதிநாளான 48 நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி காலை சிறப்பு யாகம் செய்யப்பட்டு விநாயகர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம்,   மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. 

    பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    பக்தர்கள் வசதிக்காக ஆறுபடை வீட்டில் உள்ள முருகப் பெருமானின் உருவங்கள்  அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.
    ×